×

வேதாரண்யம் பகுதியில் நாகை தொகுதி அதிமுக வேட்பாளர் தாழை சரவணன் வாக்குசேகரிப்பு

வேதாரண்யம், ஏப்.10: நாகை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் தாழை சரவணன் வேதாரண்யம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.வேதாரண்யத்தில் நாகை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் தாழை சரவணன் கரியாப்பட்டினம், தென்னம்புலம், குரவப்புலம், ஆயக்காரன்புலம், பிராந்தியங்கரை உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அவருடன் அமைச்சர் ஓ.எஸ் மணியன் மற்றும் கூட்டணி  கட்சியினர் திரளானோர் சென்றனர்.

அப்போது அமைச்சர் ஓ.எஸ். மணியன் அளித்த பேட்டி: தற்போது நடைபெறும் கருத்துக் கணிப்புகள் கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு தான். கருத்து கணிப்பு முற்றிலும் தவறானது, விரோதமானது. ஒருதலைபட்சமாக எடுக்கப்படுகிறது. மக்கள் ஏற்காத எந்த திட்டத்தற்கும் அரசு அனுமதி அளிக்காது. இதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை. பொய் பிரசாரங்களை நம்ப  வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார். பிரசாரத்தின்போது ஒன்றிய செயலாளர் கிரிதரன், நகர செயலாளர் எழிலரசு மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags : Thalai Saravanan ,AIADMK ,Vedaranyam ,
× RELATED வேதாரண்யம் கடற்கரையில் ஒதுங்கும்...