×

எலவனூர் பால தண்டாயுதபாணி கோயிலில் சோமவார திருவிழா பக்தர்கள் தீர்த்த காவடி எடுத்து வந்து தரிசனம்

க.பரமத்தி, ஏப். 10:  எலவனூர் பாலதண்டாயுதபானி கோவிலில் சோமவார திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீர்த்தக்காவடி கொண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர். க.பரமத்தி ஒன்றியம் எலவனூரில் பாலதண்டாயுதபானி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் நான்காவது திங்கள் கிழமை சோமவார திருவிழா கொண்டாடுவது வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த விழாவிற்காக கடந்த பங்குனி 1ம் தேதி முதல் மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்கினர்.கடந்த 5ம் தேதி இரவு பக்தர்கள் அனைவரும் கோவிலை வந்தடைந்தனர். பிறகு நடை பயணமாக கொடுமுடி புறப்பட்டு சென்றனர். கடந்த 8ம் தேதி காலை 9 மணிக்கு கொடுமுடி காவிரி ஆற்றில் புனித தீர்த்தம் எடுத்து கொண்டு நடைபயணமாக மறுநாள் 9ம் தேதி எலவனூர் விநாயகர் கோயிலுக்கு மேள தாளம் முழங்க வந்தடைந்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

பிறகு விநாயகர் கோயிலில் இருந்து தீர்த்த காவடி புறப்பட்டு பாலதண்டாயுதபானி கோயிலை வந்தடைந்தது. இதனையடுத்து காமாட்சி அம்மன், பாலதண்டாயுதபானி, வள்ளி, தெய்வானை தெய்வங்களுக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர், தேன், கரும்புபால் ஆகிய 18 வகை மூலிகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து வழிபாடு நடத்தப்பட்டு பாலதண்டாயுதபானி, வள்ளி, தெய்வானைக்கு பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்லக்கில் விநாயகர் கோயிலுக்கு எடுத்து சென்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு மீண்டும் கோயிலை வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து விரதம் முடித்தனர். விழா ஏற்பாடுகளை செங்குந்தர் இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


Tags : Somavara ,festival ,Elephantur Paladapudupani ,
× RELATED கோயில் திருவிழாவில் இரு...