×

புதர் மண்டி காணப்படும் கழிவு நீர் ஓடை

கரூர், ஏப். 10: புதர்மண்டிய கழிவுநீர் ஓடையை சீரமைக்க பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் சுங்ககேட் பகுதியில் கழிவுநீர் ஓடை உள்ளது. ஏராளமான குடியிருப்புகள் அமைந்துள்ளது. சுங்ககேட் மெயின்ரோட்டை கடந்து அமராவதி ஆற்றுப்பகுதிக்கு இந்த ஓடை செல்கிறது. பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் கழிவுநீர் ஓடையில் தேங்கி கிடக்கிறது. இதனை தூர்வாரி நீண்ட காலமாகி விட்டது. செடிகள் வளர்ந்து மண்மேடாக இருப்பதால் கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தி கூடமாக இருக்கிறது. லட்சக்கணக்கில் செலவு செய்து இடம் வாங்கி வீடு கட்டியவர்கள் இப்போது சுகாதார கேட்டில் சிக்கி தவிக்கின்றனர். சுகாதார கேட்டை தடுக்க கழிவுநீர் ஓடையை தூர்வாரி சீரமைக்கவேண்டும் என பகுதி வாசிகள் எதிர்பார்க்கின்றனர்.


Tags : bush ,
× RELATED பராமரிக்க மறந்த அதிகாரிகள் புதர் மண்டி கிடக்கும் கால்வாய்கள்