தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் கரூர் பகுதியில் பிரசாரத்திற்கு வராத நடிகர், நடிகைகள்

கரூர், ஏப். 10: மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் கரூர் தொகுதியில் நடிகர், நடிகைகளின் பிரசாரம் கடந்த தேர்தலை விட மிகவும் குறைவாகவே உள்ளது.கடந்த மார்ச் 10ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு மார்ச் 19ம் தேதி முதல் 26ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கரூர் மக்களவை தொகுதியில் 42 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.இதில் காங்கிரஸ், அதிமுக மற்றும் அமமுக வேட்பாளர்கள் மட்டுமே தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் சென்று பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் வழக்கமாக மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய நடிகர், நடிகைகள் அதிகளவு தொகுதிக்கு வந்து பிரச்சாரம் மேற்கொள்வார்கள். ஆனால் இந்த முறை குறிப்பிட்ட அளவு யாரும் பிரசாரம் மேற்கொள்ள வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை பபிதா, நடிகர் கஞ்சா கருப்பு ஆகியோர் மட்டுமே கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கரூர் தொகுதிக்குட்பட்ட சில பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு சென்றுள்ளனர். பிரசாரம் ஏப்ரல் 16ம்தேதி மாலையுடன் நிறைவடையவுள்ளதால், குறிப்பிட்ட ஒரு வாரத்திற்குள் நடிகர், நடிகைகள் வந்தால் தான் உண்டு.

Tags : Actors ,actresses ,area ,Karur ,
× RELATED நடிகைகளை பதற வைக்கும் டிவி நடிகை