×

புதூர் ஒன்றிய பகுதிகளில் அதிமுக வேட்பாளர் சின்னப்பன் தீவிர வாக்கு சேகரிப்பு

விளாத்திகுளம், ஏப்.10: விளாத்திகுளம் அருகே புதூர் ஒன்றிய பகுதிகளில் அதிமுக வேட்பாளர் சின்னப்பன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அவர், தொகுதிக்குட்பட்ட ராமச்சந்திராபுரம், முத்தையாபுரம், சுந்தரபச்சையாபுரம், லட்சுமிபுரம், மல்லீஸ்வரபுரம், காடல்குடி, கே.சுப்பையாபுரம், வாதலக்கரை, இடைச்சியூரணி, கே.துரைசாமிபுரம், நூலக்கரை, சின்னையாபுரம், பூதலாபுரம், கந்தசாமிபுரம், குமாரபுரம், கழுகாசலபுரம், சின்னூர் உள்ளிட்ட பல கிராமங்களில் வாக்குகள் சேகரித்தார்.தமிழகத்தில் மக்கள் விரும்பும் பல்வேறு நலத் திட்டங்களை அதிமுக அரசு பொது மக்களுக்கு வழங்கி வருகிறது தொடர்ந்து பொதுமக்கள் விவசாயிகள் இளைஞர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் தொலைநோக்கு திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது.

அதிமுக அரசு தொடர்ந்து மாநிலத்தில் ஆட்சி செய்தால் மட்டுமே விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்க முடியும். மேலும் கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகளான சாலைகள் மேம்பாடு குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.விளாத்திகுளம் தொகுதி அதிமுக கழகத்தின் உண்மையான தொண்டர்கள் நிறைந்த தொகுதி என்பதால் அதிமுக சார்பில் போட்டியிடும் என்னை பொதுமக்கள் நிச்சயமாக ஏராளமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்வார்கள்.தற்போது உள்ள மத்திய மாநில அரசுகளுக்கு இடையே நல்ல புரிதல் இருப்பதால் தமிழக மக்களுக்கு தேவையான பல்வேறு நல திட்டங்களை மத்திய அரசின் மூலம் கொண்டுவர முடியும்எனவே விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் போட்டியிடும் என்னையும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜனை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று பேசினார்.


Tags : AIADMK ,candidate ,areas ,
× RELATED பழநியில் பகிரங்கமாக வெடித்த கோஷ்டி...