×

புதுப்பட்டி முத்தாரம்மன் கோயில் பங்குனி திருவிழா கோலாகலம்

நெல்லை, ஏப்.10: புதுப்பட்டி முத்தாரம்மன் கோயில் பங்குனி திருவிழாவில்  இன்று(10ம்தேதி) அம்மன் ஊர் எல்லைக்கு செல்லும் வைபவம் நடக்கிறது. அணியாபரநல்லூர் பஞ்சாயத்து புதுப்பட்டி முத்தாரம்மன் கோயில் பங்குனி திருவிழா நேற்று துவங்கியது. இரவு 7மணிக்கு உச்சினிமாகாளி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து அம்மன் உருவம் பிடித்த இடத்தில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு மேளதாளத்துடன்  அம்மன் ஊர்வலமாக வரும் வைபவம் நடந்தது. இன்று(10ம்தேதி) இரவு 7மணிக்கு சிறப்பு பூஜைகளை தொடர்ந்து அம்மன் ஊர் எல்லைக்கு செல்லும் அற்புத காட்சி நடக்கிறது.

விழாவில் கரகாட்டம், குறவன் குறத்தி ஆட்டம், நாதஸ்வரம், நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவில்அணியாபரநல்லூர், மீனாட்சி பட்டி, தன்னூத்து, சீதாகுளம், தெய்வச்செயல்புரம், பொட்டலூரணி, சுற்றுவட்டார கிராம மக்கள் சாதி மத பேதமின்றி கலந்து கொள்ளும் சமத்துவ திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். விழா ஏற்பாடுகளை தர்மகர்த்தா முத்தையாபிள்ளை, நயினார் மற்றும் விழா குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Tags : festival ,Poojapatti Mutharaman Kovil ,festivals ,
× RELATED வெளுத்துக் கட்டிய மழையால்...