×

கோவில்பட்டி, விளாத்திகுளத்தில் இன்று நடிகர் கார்த்திக், ஜான்பாண்டியன் பிரசாரம்

கோவில்பட்டி, ஏப்.10: தமிழக அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான கடம்பூர்ராஜூ விடுத்துள்ள அறிக்கை:  தூத்துக்குடி மக்களவை தொகுதி பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு தாமரை சின்னத்தில் வாக்குகேட்டு இன்று மாலை 5 மணிக்கு கோவில்பட்டி காந்திநகரில் பிரசாரத்தை தொடங்கும் நடிகர் கார்த்திக், தொடர்ந்து அத்தைகொண்டான், இனாம்மணியாச்சியிலும், கயத்தாறு, எட்டயபுரம், கருங்குளம் ஒன்றிய பகுதி கிராமங்களில் பிரசாரம் செய்கிறார். இதேபோல் விளாத்திகுளத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் தூத்துக்குடி மக்களவை தொகுதி பாஜ வேட்பாளர் தமிழிசை மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சின்னப்பன் ஆகியோரை ஆதரித்து தமமுக தலைவர் ஜான்பாண்டியன் வாக்கு சேகரிக்கிறார்.

நாளை (11ம் தேதி) இரவு 9 மணிக்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் சமக தலைவர் சரத்குமார், பாஜ வேட்பாளர் தமிழிசை, அதிமுக வேட்பாளர் சின்னப்பன் ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பேசுகிறார். பிரசாரத்தின் நிறைவு நாளான 16ம்தேதி காலை 6 மணிக்கு பாஜ வேட்பாளர் தமிழிசை கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு, அன்னைதெரசா நகரிலும், தொடர்ந்து கோவில்பட்டி 36 வார்டு பகுதிகளிலும் சென்று தாமரை சின்னத்தில் வாக்குகேட்டு பிரசாரம் செய்கிறார். அன்று மாலை 4.30 மணிக்கு கோவில்பட்டி கிருஷ்ணன்கோவில் தெரு திடலில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் தமிழிசை வாக்கு சேகரித்து தனது தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.  எனவே பொதுக்கூட்டங்கள், தேர்தல் பிரசாரங்களில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்க கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Karthik ,Janapandian Prakasham ,Kovilpatti ,Vladikulam ,
× RELATED கைதான அர்ச்சகரின் தாய் மாமன் மீது பெண் புகார்