×

உடன்குடி பகுதியில் பிரசாரம் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாதவர் மோடி



உடன்குடி, ஏப்.10:  தேர்தல் நேரத்தில் அளித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாதவர் மோடி என உடன்குடி பகுதியில் தேர்தல் பிரசாரத்தின் போது திமுக வேட்பாளர் கனிமொழி பேசினார். உடன்குடி யூனியனுக்குட்பட்ட தண்டுபத்தில் மதசார்பற்ற கூட்டணி திமுக வேட்பாளர் கனிமொழி தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். விஜயநாராயணபுரம், சீர்காட்சி, நயினார்பத்து, தைக்காவூர், உடன்குடி நடுக்காலன்குடியிருப்பு. உடன்குடி பேருந்துநிலையம், வில்லிகுடியிருப்பு, கல்லாமொழி, அண்ணாசாலை, குலசை.,கோயில் பேருந்து நிலையம், மணப்பாடு, புதுக்குடியேற்று, சிறுநாடார்குடியிருப்பு, மாதவன்குறிச்சி, நாராயணபுரம், தாண்டவன்காடு, ஞானியார்குடியிருப்பு, வேதகோட்டைவிளை, ராமசாமிபுரம், கந்தசாமிபுரம், உதிரமாடன்குடியிருப்பு, பிறைகுடியிருப்பு, மெய்யூர், கொட்டங்காடு, சிவலூர், சந்தையடியூர், வைத்தியலிங்கபுரம், கிறிஸ்தியாநகரம், உடன்குடி பஜார் ஆகிய பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது அவர் பேசுகையில், பாஜ தேர்தல் அறிக்கையில் விவசாயிகள், பெண்கள் மீது திடீர் பாசம் வந்துள்ளது. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் போதும், டெல்லியில் அவரை சந்திக்க காத்து கிடந்த போதும் கண்டுகொள்ளவில்லை. தற்போது திடீர் அக்கறை ஏற்பட்டு ஓய்வூதியம் அறிவித்துள்ளார். பெண்களுக்கு இடஒதுக்கீடு கொண்டு வருவதாக அறிவிக்கின்றனர்.

நம்பி மீண்டும் வாக்களித்தால் நம்மை ஏமாற்ற நினைத்துக் கொண்டு இருக்கின்றனர் ஆனால் மக்கள் நிச்சயமாக ஏமாற மாட்டார்கள் மோடிக்கு தனி சிறப்பு அது என்னவென்றால் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது கிடையாது.
ஆனால்  கலைஞர் தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர். மோடி எந்த ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அவருக்கு வெளிநாட்டில் இருப்பது தான் பிடிக்கும். அவர் தேர்தலுக்கு பிறகு நிரந்தரமாக வெளிநாட்டில் இருக்கட்டும். திடீரென தூத்துக்குடி மீது பாஜவிற்கு பாசம் வந்துள்ளது. நம்முடைய உரிமைக்காக போராடிய பெரியார் சிலையை தேர்தல் நேரத்தில் உடைத்து கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். மக்களின் நீண்டநாள் கோரிக்கையான பெருந்தலைவர் சிலை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும். வரும் தேர்தல் நாடும் நமதே நாற்பதும் நமதே என்ற நிலைைய உருவாக்கும் வகையில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என பேசினார். இதில் தெற்குமாவட்ட பொறுப்பாளர் அனிதாராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, பொதுக்குழு உறுப்பினர் முத்துசெல்வன், மாவட்ட அமைப்பாளர்கள் சிறுபான்மை நலஉரிமைப்பிரிவு ராஜேஷ், நெசவாளரணி மகாவிஷ்ணு, மாவட்ட துணைஅமைப்பாளர்கள் கலைஇலக்கிய அணி ரஞ்சன், வர்த்தகஅணி ரவிராஜா, ஒன்றியசெயலாளர் பாலசிங், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சிவபிரகாஷ், நகர செயலாளர் ஜான்பாஸ்கர், இளைஞரணி செயலாளர் அஜய், தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் சிவசுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் நடராஜன், வட்டார தலைவர் துரைராஜ்ஜோசப், கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், கிறிஸ்டோபர், சமக ஒன்றியசெயலாளர் பாலாஜி, விசிக ஒன்றிய செயலாளர் சங்கர், கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.


Tags : Modi ,Udangudi ,
× RELATED பிரதமர் மோடி அள்ளி வீசி வரும் பொய்...