×

பள்ளிகொண்டாவில் பரபரப்பு சூப்பர் மார்க்கெட்டில் வருமானவரித் துறையினர் சோதனை

பள்ளிகொண்டா, ஏப்.10: பள்ளிகொண்டாவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வருமானவரித் துறையினர் திடீர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா மெயின் ரோட்டில் தனியார் மெடிக்கல்ஸ் 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் கமலகண்ணன்(75). இவர் வியாபாரிகள் சங்க கவுரவத் தலைவராக உள்ளார். இதில், கடந்த 2009ம் முதல் ஆண்டு மெடிக்கல் அருகில் சூப்பர் மார்க்கெட்டும், புத்தக கடையும் நடத்தி வருகிறார்.இந்நிலையில், நேற்று மாலை 5.30 மணியளவில் சென்னையை சேர்ந்த வருமானவரி துறை அதிகாரிகள் 8 பேர் கொண்ட குழுவினர் கமலகண்ணனின் கடை, வீடு மற்றும் குடோன்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.இதுகுறித்து அதிகாரிகள் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இரவிலும் தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Department ,
× RELATED குறைவான செலவில் குச்சி முருங்கை...