தாய், மகன் கொலை சம்பவம் தொடர்பாக சிசிடிவி கேமரா, செல்போன் எண்கள் தீவிர ஆய்வு

சென்னை, ஏப்.10: திருத்தணி - அரக்கோணம் சாலை, பிஜி புதூர், பாலாஜி நகரில் வசிப்பவர், தேனி மாவட்டம், போடிநாயக்கன்பட்டியை சேர்ந்த வனப்பெருமாள் (50). திருத்தணி - அரக்கோணம் சாலையில் உள்ள தனியார் டயர்  தொழிற்சாலையில் கடந்த 20 ஆண்டுகளாக செக்யூரிட்டி சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார்.இவரது மனைவி விஜ (எ) வீரலட்சுமி. மாற்றுத் திறனாளி. இவர்களுக்கு பவித்ரா என்ற மகளும், போத்துராஜா (13) என்ற மகனும் உள்ளனர். பவித்ராவுக்கு திருமணமாகி, கணவன் வீட்டில் உள்ளார்.இந்நிலையில், 8ம் தேதி இரவு  வழக்கம்போல் வனப்பெருமாள் வேலைக்கு சென்றார். வீட்டில் மனைவியும் மகனும் இருந்தனர். நேற்று முன்தினம் அதிகாலை வனப்பெருமாள் வேலை முடிந்து வீடு திரும்பினார். அப்போது, மனைவி மற்றும் மகன் படுகொலை  செய்யப்பட்டு கிடந்ததை கண்டு கதறி அழுதார்.

புகாரின்படி திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், அதிகாலையில் வனப்பெருமாள் வீட்டில் நுழைந்த மர்மநபர்கள், வீரலட்சுமி மற்றும் போத்துராஜாவை கொலை செய்து, 30 சவரன் நகையை  கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.
தொடர்ந்து, டிஎஸ்பி சேகர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் முருகன், ரமேஷ், ஜெயராமன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படை அமைத்து கொலையாளிகளை வலைவீசி தேடிவருகின்றனர். மேலும் அப்பகுதியில்  பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா, செல்போன் டவரில் பதிவான எண்களை வைத்தும் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

× RELATED சென்னையில் ஒரே நாளில் நடந்த 9 செயின்...