×

ஊடடியில் ‘குளு குளு’ காலநிலை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

ஊட்டி, ஏப். 9: சமவெளிப் பகுதிகளில் வெயில் வாட்டி வரும் நிலையில், ஊட்டியில் மேக மூட்டத்தால் குளு குளு காலநிலை நிலவியதால் ஊட்டியில் முகாமிட்டுள்ள சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, உள்ளூர் மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பொதுவாக மார்ச் மாதம் துவங்கி விட்டாலே வெயில் கொளுத்தும். இதனால், பகல் நேரங்களில் மட்டுமின்றி, இரவு நேரங்களிலும் சூடு அதிகமாக காணப்படும். கடந்த சில ஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்திலும் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு கோடை காலம் துவங்கினாலே வெயில் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் முற்றிலும் பனி பொழிவு குறைந்து பகல் நேரங்களில் வெயில் வாட்டும். இரவில், குளிர் குறைந்து காணப்படும். ஆனால், இம்முறை மாறுபட்ட காலநிலை நீடிக்கிறது.

 ஏப்ரல் மாதம் 10ம் தேதி ஆகியும் இன்னும் இரவு நேரங்களில் நீர் பனி பொழிவு காணப்படுகிறது. குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இரவு நேரங்களில் நீர் பனி பொழிவு காணப்படுகிறது. இதனால், தாழ்வான பகுதிகள் மற்றும் நீர் நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில குளிரான காலநிலை தற்போதும் நிலவுகிறது. மேலும், இரவில் பனி பொழிவும், பகலில் வெயில் வாட்டி வருவதால் தேயிலை மகசூல், காய்கறி விவசாயம் ஆகியவை பாதிக்க வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.  அதுமட்டுமின்றி, கோடை சீசனுக்காக தற்போது ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா உட்பட அனைத்து பூங்காக்களும் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது நீர்பனி கொட்டி வருவதால் பூங்காவில் உள்ள மலர் செடிகளுக்கு கோத்தகிரி மலர் செடிகளை கொண்ட மூடப்பட்டுள்ளது.  

இந்நிலையில், நேற்று ஊட்டியில் காலை முதல் மாலை வரை மேக மூட்டம் காணப்பட்டது. எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யலாம் என்ற காலநிலை காணப்பட்டது. ஆனால், நேற்று மாலை வரை மழை பெய்யவில்லை. எனினும், பகல் நேரங்களில் நேற்று வெயில் மற்றும் சூடு குறைந்து குளிரான கால நிலை நிலவியது. நேற்று ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் அதிகபட்சமாக 21 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 12 டிகிரி செல்சியசும் பதிவாகியிருந்தது. ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, உள்ளூர் மக்களும் இரவு நேரங்களில் நிலவும் குளிரான காலநிலை, மாலை நேரங்களில் வீசும் ‘ஜில்’ காற்றையும் ரசித்து மகிழ்கின்றனர்..

Tags : Kulu Kullu ,
× RELATED குன்னூரில் கோடைகால ஹாக்கி பயிற்சி முகாம் நிறைவு