×

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் பழனியப்பன் கிராமங்களில் தீவிர பிரசாரம்

தர்மபுரி, ஏப்.9: தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் பழனியப்பன், பெரியாம்பட்டி உள்ளிட்ட 59 கிராமங்களில் நேற்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் போட்டியிடுகிறார். அவர் நாடாளுமன்றத் தொகுதி முழுவதும், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று காரிமங்கலம் ஒன்றியத்தில் மல்லிகுட்டை, மோதூர், மாட்லாம்பட்டி, கன்னிப்பட்டி, இண்டமங்கலம், கோவிலூர் உள்ளிட்ட 59 கிராமங்களில், அமமுக வேட்பாளர் பழனியப்பன் தெரு, தெருவாக நடந்து சென்றும், திறந்த ஜீப்பிலும் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் சென்ற இடங்களில் எல்லாம், அவருக்கு ஆரத்தி எடுத்து பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரசாரத்தின் போது முன்னாள் அமைச்சர் பழனியப்பன் பேசுகையில், ‘தமிழகத்தில் தற்போது நல்ல அரசியல் தலைவர் என்று கூறினால், அது டிடிவி தினகரன் தான். நாங்கள் கூட்டணியை நம்பாமல், மக்களை நம்பியே இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம். தர்மபுரி மாவட்ட மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் நிறைவேற்ற எனக்கு பரிசு பெட்டகம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும்,’ என்றார். பிரசாரத்தின் போது, முன்னாள் மாவட்ட செயலாளர் பூக்கடை முனுசாமி, அமமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags : Dhammapuri ,constituency ,candidate ,villages ,Palaniyappan ,
× RELATED விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...