×

மெட்டாலா ஆஞ்சநேயர் கோயிலில் தீமிதி விழா

நாமகிரிப்பேட்டை, ஏப்.9: நாமகிரிப்பேட்டை அடுத்த மெட்டாலா கனவாய் பகுதியில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை தீமிதி விழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு தீமிதி விழா நேற்று நடந்தது. முன்னதாக கன்னிமார் ஊற்றிலிருந்து சுவாமிக்கு சக்தி அழைப்பு, சுவாமி நீராடுதல் மற்றும் ஆஞ்சநேயர் திருவீதி உலா நடந்தது. பின்னர், புஷ்ப பல்லக்கில் சுவாமி ஊர்வலம் நடந்தது. மாலை 6மணிக்கு மேல் தொடங்கிய தீமிதி விழாவில், முதலில் கோயில் பூசாரி குண்டம் இறங்கினார். அதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தியும், அக்னிகரகம் எடுத்தும் வேண்டுதல் நிறைவேற்றினர்.

Tags : festival ,Metalla Anjaneya ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...