×

கடையம் பகுதியில் கிராமம், கிராமமாக பிரசாரம்ராமநதி, கடனாநதி அணைகள் தூர்வாரப்படும்

கடையம்,ஏப்.9: ராமநதி, கடனாநதி அணைகள் தூர்வாரப்படும் என நெல்லை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ஞானதிரவியம் கடையம் பகுதியில் நடந்த பிரசாரத்தில் உறுதிஅளித்தார்.கடையம் அருகே கீழாம்பூர், கருத்தபிள்ளையூர், பங்களாகுடியிருப்பு, புதுகுடியிருப்பு, சிவசைலம், கல்யாணிபுரம், செட்டிகுளம், சம்பன்குளம்,அழகப்பபுரம், நீலமேகபுரம், கோவிந்தபேரி, ராஜாங்கபுரம், மந்தியூர், பிள்ளைகுளம், ரவணசமுத்திரம், மாலிக் நகர், வீராசமுத்திரம், நாணல்குளம் மற்றும் வாகைகுளம் ஆகிய பகுதிகளில் நெல்லை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ஞானதிரவியம் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.  அவருடன் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை வாக்கு சேகரித்தார். அப்போது வேட்பாளர் ஞானதிரவியம் பேசியதாவது: மோடி ஆட்சியில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது.  மக்கள் நலனில் எந்த அக்கறையும் காட்டாத எடப்பாடி ஆட்சி விரைவில் அகற்றப்பட வேண்டும். திமுக தேர்தல் அறிக்கையில் விவசாய கடன் தள்ளுபடி, கல்விகடன் தள்ளுபடி, நீட் தேர்வு ரத்து, போன்ற எண்ணற்ற நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உள்ளாட்சி தேர்தலை நடத்தாத எடப்பாடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் நூறு நாள் வேலை திட்டம் 150 நாட்களாக அதிகரிக்கப்படும். பொதுமக்கள் கோரிக்கைக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். கடையம் ராமநதி, கடனா நதி அணைகள் தூர்வாரப்படும். மின்வேலி அமைத்து வன விலங்குகளிடமிருந்து விவசாய விளை நிலங்கள் பாதுகாக்கப்படும். நெல்லுக்கான தொகை விவசாயிகளுக்கு  உடனடியாக வழங்கப்படும். குளங்கள் கால்வாய்கள் தூர்வாரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

 இதில் கடையம் ஒன்றிய திமுக செயலாளர் குமார், மாவட்ட மகளிரணி செல்வி சங்குகிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் சரஸ்வதி நாராயணன்,  சங்குகிருஷ்ணன், மாவட்ட விவசாய அணி ரவிசந்திரன், மாவட்ட முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளர் சேர்மசெல்வன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் தங்கராஜா, துணை செயலாளர் தமிழ்செல்வன், பொருளாளர் துரை, ஆழ்வை நகர செயலளார் பொன்ஸ், முன்னாள் நகர செயலாளர் அல்லாபிச்சை, சிங்ககுட்டி, முன்னாள் ஊராட்சி தலைவர்கள் முகமது இப்ராகிம், ஈஸ்வரம், வின்சென்ட், மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்கேஎம் சிவகுமார், கடையம் வட்டார காங்கிரஸ் தலைவர்கள் முருகன், மாரியப்பன், ஆழ்வை நகர தலைவர் தங்கராஜா,  சப்பாணி, விவசாய சங்க மாவட்ட தலைவர் கசமுத்து, இந்திய கம்யூனிஸ்ட் வேலாயுதம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ராமகிருஷ்ணன், வெங்கடேஷ், முத்துராஜ் தமுமுக மாவட்ட துணை செயலாளர், ஆட்டோ சித்திக், தொண்டரணி மாவட்ட பொருளாளர் ஆதம்பின்  ஹனிபா,  ஒன்றிய தலைவர் மீரான் மைதீன், மமக மதார் மைதீன், தமுமுக சரிப், விடுதலை சிறுத்தை ஒன்றிய செயலாளர் அன்பழகன், முஸ்லிம் லீக் மாவட்ட அமைப்பு செயலாளர் அப்துல்காதர், தலைமை நிலைய பேச்சாளர் முகம்மது அலி, மாவட்ட துணை தலைவர் சாகுல்ஹமீது, மாவட்ட துணை செயலாளர் நல்லாசியர் செய்யது மசூது,   தொகுதி அமைப்பாளர் யஹ்யா, மாவட்ட மாணவரணி பொருளாளர் தமிம் அன்சாரி உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : village ,area ,Kadayam ,Kadana ,Prasaramarathi ,
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...