×

விவிபேட் இயந்திரம் செயல்விளக்கம்

புவனகிரி, ஏப். 9: விவிபேட் இயந்திரம் செயல்படும் விதம் குறித்து வேட்பாளரின் முகவர்களுக்கு உதவி தேர்தல் அலுவலர் முன்னிலையில் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. சிதம்பரம் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட புவனகிரி சட்டப்பேரவை தொகுதியில் 291 வாக்குச் சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச் சாவடிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்கள் உள்ளிட்டவை புவனகிரி வட்டாட்சியர் அலுவலக மாடியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த அறை சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் நேற்று புவனகிரி சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் அலுவலர் வெற்றிவேல், புவனகிரி தாசில்தார் சத்தியன், தேர்தல் துணை தாசில்தார் தரன் ஆகியோர் அரசியல் கட்சி வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீலிடப்பட்ட அறையை திறந்தனர். பின்னர் அங்கிருந்த இயந்திரங்கள் எடுக்கப்பட்டு அதில் சின்னம் மற்றும் வேட்பாளர் பெயர் பொருத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரத்தில் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்து.  இதையடுத்து மற்ற வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் மற்றும் வேட்பாளர்களின் பெயர்களை பொருத்தும் பணி நடந்து வருகிறது.

Tags : machine demonstration ,
× RELATED வாக்குபதிவு இயந்திரம் செயல்விளக்க கூட்டம்