×

அபிராமி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் 17ல் திருக்கல்யாணம் 18ல் தேரோட்டம்

திண்டுக்கல், ஏப். 9: திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற ஞானம்பிகை உடனமர் அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர், அருள்தரும் அபிராமி அம்மன் உடனமர் அருள்மிகு பத்மகிரீஸ்வரர் கோயில் உள்ளது. தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்ட இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடக்கும். இந்தாண்டு சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கி வரும் 19ம் தேதி வரை நடக்கிறது. திருவிழா நடக்கும் 12 நாட்களும் சுவாமியும், அம்பாளும் ஒவ்வொரு வாகனத்தில் வீதியுலா வருவர். முக்கிய நிகழ்வாக வரும் 17ம் தேதி மாலை 5 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பும், தொடர்ந்து 7.30 மணிக்கு திருக்கல்யாணமும் வெகு விமரிசையாக நடைபெறும். மறுநாள் 18ம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறும். இதில் திண்டுக்கல் நகர் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர்.

Tags : Abirami Amman Kailai Festival Kodiyam ,
× RELATED டூவீலர் திருடிய கொத்தனார் கைது