×

பழநி பகுதியில் குளங்களின் நீர்பிடிப்பு பரப்பை ஆக்கிரமித்து விவசாயம் நடவடிக்கை எடுக்கப்படுமா?

பழநி, ஏப். 9: குளங்களின் நீர்பிடிப்பு ஆக்கிரமித்து விவசாயம் செய்யபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழநி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்கள் விவசாயத்தை அடிப்படையாக கொண்டவை. இதனால் விவசாயம், குடிநீர் பயன்பாட்டிற்காக பழநி பகுதியில் ஏராளமான அளவில் குளம், கண்மாய் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கொளுத்தும் வெயிலின் காரணமாக தற்போது குளங்கள், கண்மாய்களில் நீர்இருப்பு குறைந்து போய் உள்ளன. இதனை தங்களுக்கு சாதகமாக்கி கொள்ளும் சிலர் குளத்தின் நீர்ப்பிடிப்பு பகுதியில் உழவு செய்து விவசாயம் செய்ய துவங்கி உள்ளனர். வருடந்தோறும் நடைபெறும் ஆக்கிரமிப்பு நடவடிக்கையால் குளங்களின் நீர்பிடிப்பு மெல்ல சுருங்கி கொண்டே வருகிறது.
இதுகுறித்து நுகர்வோர் அமைப்பின் நிர்வாகி பழனிச்சாமி கூறியதாவது, ‘பழநி பகுதியில் உள்ள குளங்கள், கண்மாய்கள் விவசாயத்திற்கு ஆதாரமாக இருப்பதுடன், குடிநீருக்கும் அடிப்படையாய் உள்ளன.

குளங்களில் நீர் இருக்கும்போது சுற்றுப்புறங்களில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். ஆனால், ஆக்கிரமிப்பு நடவடிக்கையால் குளங்களின் நீர்பிடிப்பு பகுதி நாளுக்குநாள் சுருங்கி  கொண்டே வருகிறது. ஆக்கிரமிப்பு பகுதிகளை மண்களை போட்டு உயரமாக்கி  கொண்டே போவதால் அங்கு நீர் சேகரிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. தவிர, ஆக்கிரமிப்பு விவசாயிகள் குளங்களின் கரைகளையும் சேதப்படுத்தி விடுகின்றனர். இதனால் ஆக்கிரமிப்பு விவசாயிகளை உடனடியாக அப்புறப்படுத்தி நிலங்களை ஜேசிபி இயந்திரம் தோண்டி குளங்களுக்கு இணையாக சமப்படுத்தி விட வேண்டும். அப்போதுதான் மழைக்காலங்களில் நீரை அதிகளவு சேமித்து விவசாயத்திற்கு பயன்படுத்த முடியும்’ என்றார்.

Tags : watershed area ,area ,Palani ,
× RELATED வயல்வெளி பள்ளியின் நன்மை வேளாண் துறை அட்வைஸ்