×

கல்லூரி மாணவர்களுக்கு இலவச வைபை, டேப் அமமுக வேட்பாளர் ஜோதிமுருகன் உறுதி

திண்டுக்கல், ஏப். 9: மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர் ஜோதிமுருகன் திண்டுக்கல் உழவர் சந்தை, என்ஜிஓ காலனி, பெரியார் நகர் பகுதியில் பிரசாரம் செய்து பேசியதாவது: திண்டுக்கல்லில் குடிநீர் பிரச்னையை தீர்ந்தபாடில்லை. பெண்கள் குடங்களுடன் தெரு, தெருவாக அலைகின்றனர். 10 நாட்களுக்கு ஒரு முறை வரும் தண்ணீரரை  பிடித்து வைப்பதால், வீடுகளில் மலேரியா கொசுக்கள் வளரும் அவலம் நீடிக்கிறது. இந்த அவலத்தை தீர்க்க அனைத்து வீடுகளுக்கும் நல்ல குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சுனாமி, கஜா புயல் போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை காக்க தமிழகத்திற்கு என தனி செயற்கைகோள் அமைக்கப்படும். கல்லூரி மாணவர்கள் இன்டர்நெட்டில் படிப்பதற்கு வசதியாக கல்லூரிகளில் இலவச வைபை வசதி செய்து தரப்படும்.

மாணவ, மாணவிகளுக்கு இலவச கையடக்க கம்பயூட்டர் (டேப்) வழங்கப்படும். கல்வியில் மாதம் சம்பளம் வாங்கினாலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பலர் வாடகை வீட்டில்தான் குடியிருந்து வருகின்றனர். இந்த குறையை போக்க அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குடியிருப்பு வசதி செய்திட நடவடிக்கை எடுக்கப்படும். ஜாக்டோ ஜியோ கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம்.  விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி நிர்வாகங்கள் குப்பையை கொட்டுவதற்கு தனி இடத்தை தேர்வு செய்து எனது தொகுதி மக்கள் சுகாதாரத்துடன் இருக்க நான் தொடர்ந்து பாடுபடுவேன்’ என்றார். அவருடன் கிழக்கு மாநகர் மாவட்ட செயலாளர் ராமுத்தேவர் உட்பட பலர் இருந்தனர்.

Tags : Jyothi Murugan ,ammukh ,college students ,
× RELATED கறம்பக்குடி அருகே மழையூரில் வேளாண் கல்லூரி மாணவிகள் கண்காட்சி