×

கமுதி பள்ளியின் ஆண்டு விழா

கமுதி, ஏப்.9: கமுதி சத்திரிய நாடார் ஆண்கள் தொடக்கப் பள்ளியின் 130வது ஆண்டு விழா, மீனாட்சி பாலபோதினி பெண்கள் தொடக்கப் பள்ளியின் 111வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு நாடார் உறவின்முறை முறைகாரர் சண்முகநாதன் தலைமை தாங்கினார். அம்பலகாரர் சக்திவேல், பள்ளியின் செயலர் சதீஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் சோமசுந்தரம் வரவேற்புரை ஆற்றினார். பெண்கள் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அமிர்தராணி ஆண்டறிக்கை வாசித்தார். மாணவர்களின் திறனை வெளிப்படுத்தும் வகையில் தமிழ், ஆங்கிலத்தில் பேச்சு, பாடல்கள் நடைபெற்றது. மாறுவேடப் போட்டி, தற்காப்புக்கலை ஆகியவை நடைபெற்றது. விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் நாடார் உறவின்முறைகாரர்கள் காரியக்காரர் சண்முகராஜ் பாண்டியன், முனியசாமி, குருராஜன், மேகராஜன், பெண்கள் மேல்நிலை ப்பள்ளி செயலர் ராஜேஸ்கண்ணா, மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி செயலர் பாபு செல்வகனி, சத்திரிய நாடார் சங்கத் தலைவர் பொன்சுதந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆசிரியை குருபிரபா நன்றி கூறினார்.

Tags : ceremony ,school ,Kamudi ,
× RELATED இந்து,முஸ்லிம்கள் இணைந்து நடத்திய பொன் ஏர் விடும் விழா