×

தேக்கடி ஏரியா... படகு சவாரியா... கடவுள் வாழும் தேசமான கேரளாவில் மேலும் சில இடங்களை சுற்றிப்பார்க்கலாமா?

தேக்கடி: தேனி மாவட்டம், கம்பத்தில் இருந்து 22 கிமீ தூரத்தில் உள்ளது குமுளி. அங்கிருந்து கேரள வனத்துறை வாகனத்தில் 3 கிமீ தூரம் பயணித்து தேக்கடியை அடையலாம். சர்வதேச சுற்றுலாத்தலம். பெரியாறு அணையில் தேங்கி நிற்கும் நீர்தேக்கப்பரப்பில் இயற்கை சூழலில் வாழும் விலங்குகளை கண்டு ரசித்தவாறே, ஏரியில் ஜாலியாக படகுச்சவாரி செய்யலாம். தேக்கடி வனப்பகுதியில் நேச்சர்வாக், யானைச்சவாரி, டைகர்வியூ என குதூகலிக்க வைக்கும் இடங்களும் உண்டு.
பருந்தும்பாறை:
குமுளியிலிருந்து 28 கிமீ தொலைவில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 5 ஆயிரம் அடி உயரத்தில் பருந்தும்பாறை உள்ளது. இயற்கை பனிமூட்டம் மூடிய மொட்டைக்குன்று, தற்கொலை பாறை விளிம்புகளும், தாகூர் பாறையும் (ரவீந்திரநாத் தாகூரின் முக அமைப்பை போன்று உள்ளதால் இவ்வாறு பெயர் பெற்றது) ரசிக்கக்கூடியவை. சபரிமலை மண்டல காலத்தில் மகரஜோதியை தரிசிக்க ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் இங்கே வருகின்றனர். மதுரையிலிருந்து 150 கிமீ தொலைவில் உள்ளது. கம்பம், குமுளி, வண்டிப்பெரியாறு வழியாக பருந்தும்பாறையை பார்வையிடலாம்.
கெவி:
தேக்கடி பெரியாறு புலிகள் சரணாலயப்பகுதிக்குள் அமைந்திருக்கும் சுற்றுலாப்பகுதி கெவி. சுற்றுலாப்பயணிகளை அழைத்து சென்று திரும்ப, கேரள வனத்துறை சார்பில், ‘ஜங்கிள் சபாரி’ என்ற பஸ் இயக்கப்படுகிறது. வண்டிப்பெரியாறு வல்லக்கடவு வனத்துறை சோதனைச்சாவடியில் இருந்து 16 கிமீ வரை செல்லும் 3 மணிநேர பயணத்துக்கு, நபர் ஒன்றுக்கு ரூ.300 டிக்ெகட் கட்டணமாகவும், ரூ.25 நுழைவுக்கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது. இயற்கையான சூழல், ஓடியாடும் விலங்கினங்களை கண்டு களிக்கலாம்.

Tags : Thekkady Area ,places ,God ,Kerala ,
× RELATED எதற்காக இறைத்தூதர்கள்?