பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவேன் திமுக வேட்பாளர் தனுஷ் எம்.குமார் பேச்சு

வத்திராயிருப்பு, ஏப். 9: வத்திராயிருப்பு ஒன்றியத்தில் தேர்தல் பிரசாரம் செய்த திமுக வேட்பாளர் தனுஷ் எம்.குமார், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவேன் என வாக்குறுதி அளித்தார். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்தில் உள்ள குன்னூர், கல்யாணிபுரம், கீழக்கோபாலபுரம், ராமச்சந்திராபுரம், நெடுங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், தென்காசி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் தனுஷ் எம்.குமார் பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தனர். அப்போது அவர் பேசியதாவது, ‘அதிமுக கூட்டணி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி நீட் தேர்வு வேண்டும் என்கிறார்.  அவருடைய மகன், மகளுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மூலம் ராமச்சந்திரா மெடிக்கல் காலேஜில் சீட் வாங்கினார். இப்போது அவருடைய மகனையோ, மகளையோ நீட் தேர்வு எழுதச் சொல்வரா? நான் தென்காசி தொகுதி எம்பியாக தேர்வு செய்யப்பட்டால், மக்களுக்கு தேவையான குடிநீர், பெண்களுக்கான கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து செய்து தருவேன். இவ்வாறு அவர் பேசினார். இந்த பிரசாரத்தில், ‘வத்திராயிருப்பு ஒன்றிய திமுக செயலாளர் முனியாண்டி, இ.கம்யூ., முன்னாள் எம்.எல்.ஏ ராமசாமி, திமுக மாவட்ட துணைச்செயலாளர் துரை, மார்க்சிஸ்ட் மாவட்ட தலைவர் அர்ச்சுணன், காங்கிரஸ் வட்டாரத் தலைவர் முத்துராஜ், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் சதுரகிரி, மனிதநேய மக்கள் கட்சி ஜியாவூதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Dhanush M. Kumar ,DMK ,public ,facilities ,
× RELATED திமுக தேர்தல் படிவம் வழங்கல்