×

குடிநீர் இருந்தும் பயனில்லை பளியர் இன மக்கள் புகார் ஆண்டிபட்டியில் நடக்கும் மோடி கூட்டத்திற்கு ஆட்களை திரட்ட ஆர்டிஓ மூலம் 650 பஸ்களுக்கு ஏற்பாடு

தேனி, ஏப். 9: ஆண்டிபட்டியில் வருகிற 13ம் தேதி பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ள பொதுக்கூட்டத்திற்கு ஆட்களை திரட்டி 650 பஸ்களில் ஆட்களை ஏற்றி வர வட்டார போக்குவரத்து அலுவலர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேனி பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.ப.ரவீந்திரநாத்குமார் போட்டியிடுகிறார். பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மயில்வேல், ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் லோகிராஜன் ஆகியோர் அதிமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
பிரதமர் மோடியின் நம்பிக்கைக்குரியவராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருந்து வருகிறார். ஓ.பன்னீர்செல்வத்திற்கும், பிரதமர் மோடிக்கும் உள்ள நெருக்கத்தின் காரணமாக ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.ப.ரவீந்திரநாத்குமாரை ஆதரித்து பேச பிரதமர் மோடி வருகிற 13ம்தேதி ஆண்டிபட்டி வருகிறார். இதற்காக பிரமாண்ட ஏற்பாட்டு பணிகள் நடந்து வருகிறது.  

இந்த பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, அவருக்கு கூட்டிய கூட்டத்தைக்காட்டிலும் இருமடங்கு கூட்டத்தை கூட்டிக்காட்டுவதாக பிரதமரிடம் ஓ.பன்னீர்செல்வம் வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இதனால், இக்கூட்டத்திற்கு ஆட்களை திரட்டும் பணியில் அதிமுகவினர் இறங்கியுள்ளனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தாலும், ஆளும் அரசின் இயந்திரங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவதிலும் ஆளும்கட்சியினர் தீவிரம் காட்டிவருகின்றனர். இதன்படி, தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் மூலமாக 650 பேருந்துகளை ஏற்பாடு செய்து, இப்பேருந்துகளில் ஆட்களை பொதுக்கூட்டத்திற்கு கொண்டு வருவதற்கான பணிகள் தீவிரமாக நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காக ஆறு மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்கள் இணைந்து ஆட்களை ஏற்றி வர தேவையான வாகனங்களுக்கு ஏற்பாடுகள் செய்து வருவதாக கூறப்படுகிறது. தேர்தல் ஆணையம் இதுகுறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags : meeting ,Modi ,Andipatti ,RDO ,
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...