×

காட்டுத்தீ சம்பவம் குறித்து விஜிலென்ஸ் விசாரணை

மூணாறு, ஏப். 9: மூணாறு அருகே வட்டவடை பகுதியில் காட்டு தீ பரவிய சம்பவம் குறித்து விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மூணாறில் முக்கிய விவசாய பகுதியாக கருதப்படுவது வட்டவடை பகுதி. இங்கு கடந்த 15 நாட்களாக கட்டுத்தீ பரவி வருகிறது. இதன் மூலம் 1000 ஏக்கர் பரப்பரளவில் இருந்த க்ரண்டிஸ் மரங்கள் தீயில் கருகி சேதமடைந்தது. மேலும் கடவரை என்ற பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ மூலம் குறிஞ்சி பூக்கள் பூக்கும் 25 ஹெக்ேடர் பகுதியும் கருகியது. இந்த தீ பிடித்ததற்கு காரணம் விவசாயிகளின் இருப்பிடங்களில் இருந்து தீ பரவி இருக்கலாம் என்று வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த சம்பவம் குறித்து வட்டவடை விவசாயிகள் வனத்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். கடந்த 15 நாட்களாக பற்றி எரிந்த தீ மூலம் 80 கோடி ரூபாய் விலை மதிப்புள்ள மரங்கள் எரிந்து சேதமடைந்ததாகவும், இந்த சம்பவம் தொடர்பாக விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்று வட்டவடை பஞ்சாயத்து தலைவர் ராமராஜ் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : wildfire incident ,
× RELATED கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது