×

தேனி ஒன்றிய பகுதிகளில் குடிநீர் பிரச்னையை தீர்க்க வைகை கூட்டு குடிநீர் திட்டம்

பெரியகுளம், ஏப். 9:தேனி ஒன்றிய பகுதிகளில் தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ரவீந்திரநாத்குமாரும், பெரியகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மயில்வேலும் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தனர். தேனி மாவட்டத்தில் ஊஞ்சாம்பட்டி, ரத்தினம்நகர், சுக்குவாடன்பட்டி, அரண்மனைபுதூர், கொடுவிலார்பட்டி, நாகலாபுரம், தப்புக்குண்டு, தாடிச்சேரி, வயல்பட்டி, வீரபாண்டி, கோட்டூர், சீலையம்பட்டி, உப்பார்பட்டி உள்ளிட்ட தேனி ஒன்றிய பகுதிகளில் நடந்த பிரச்சாரத்தின் போது தேனி பாராளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் பேசும்போது, போடி-மதுரை ரயில் சேவையை விரைந்து துவக்க நடவடிக்கை எடுப்பேன். மேலும் நமது நீண்ட நாள் கோரிக்கையான திண்டுக்கல் சபரிமலை ரயில்திட்டத்தை நிறைவேற்றுவேன். உங்களின் அடிப்படை தேவைகளில் முக்கியமான குடிநீர் பிரச்சனையை தீர்த்திட வைகை கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவேன். உங்கள் பகுதியில் 2லட்சம் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்படும். மழைகாலங்களில் வீணாக செல்லும் தண்ணீரை கண்மாய்களில் தேக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கும் மானியங்களை பெற்றுத்தருவேன். நமது தொகுதியை முதன்மை தொகுதியாக உருவாக்கிட உங்களில் ஒருவனாக உங்கள் வீட்டு பிள்ளையான எனக்கும், பெரியகுளம் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் மயில்வேலுக்கும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என்றார். இப்பிரச்சாரத்தின் போது ஜெயஸ்ரீ, ஜெயராமச்சந்திரன் என குழந்தைகளுக்கு பெயர் சூட்டினார். பிரச்சாரத்திற்கு செல்லும் பகுதி முழுவதும் பெண்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.
பகுதி பொதுமக்கள் கோரிக்கை ரவீந்திரநாத்குமார் வாக்குறுதி.

Tags : regions ,Tamil Nadu ,
× RELATED அவரை சாகுபடியில் அதிக மகசூல் பெறும் வழிமுறை