×

பேரையூரில் சுயம்பு பத்ரகாளியம்மன் திருவிழா பயணிகள் சங்கம் வலியுறுத்தல்

பேரையூர்/உசிலம்பட்டி, ஏப்.9: பேரையூர் சுயம்பு பத்ரகாளியம்மன், மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பறவை காவடி, தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பேரையூரில் சுயம்பு பத்ரகாளியம்மன், மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 7 நாட்களுக்கு முன்பு காப்புகட்டி தொடங்கப்பட்டது. திருவிழாவில் பக்தர்கள் தீச்சட்டி, பறவைக்காவடி, தொட்டில்பிள்ளையுடன் தீச்சட்டி, 21 மற்றும் 101 தீச்சட்டி, அழகுகுத்தி நேர்த்திக்கடன்களை செலுத்தினர். தீச்சட்டி, பறவை காவடி ஊர்வலங்கள் கோவிலில் இருந்து தெற்குதெரு, முஸ்லீம்தெரு, பெருமாள்கோவில்வீதி, பட்டயத்துமுக்கு, அரண்மனைவீதி வழியாக கோவிலுக்கு வந்தது. சுயம்பு பத்ரகாளியம்மன், மாரியம்மனுக்கு 11 விதமான சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. அம்மன் பூமாலையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருவிழாவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல் பேரையூர் தாலுகா, எழுமலை அருகேயுள்ள மள்ளப்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட எம்.கல்லுப்பட்டி, எம்.பெருமாள்பட்டி மாரியம்மன்கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது. பக்தர்கள் முளைப்பாரி எடுத்தும், பூக்குழி இறங்கியும் நேர்த்தி கடன் செலுத்தினார்கள். மாரியம்மனுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், நெய், சந்தனம் உள்ளிட்ட 11 விதமான சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

Tags : Swayambu Bhadrakaliyamman Festival Passenger Society ,
× RELATED ஒரு ஓட்டு கூட போடாத இரண்டு கிராமமக்கள்