×

கலெக்டர் ஆபீஸில் மக்கள் முற்றுகை பெரியார் சிலை உடைப்புக்கு கண்டனம் 13க்குள் தபால் ஓட்டு ஜாக்டோ ஜியோ கெடு

மதுரை, ஏப்.9: மதுரை மாவட்டத்தில் உள்ள 2,755 வாக்குச்சாவடிகளில் 13 ஆயிரத்து 953 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு தபால் ஓட்டு வழங்கப்பட வேண்டும். இவர்கள் முறையாக விண்ணப்பம் செய்து, ஏப்.7ல் நடந்த 2வது கட்ட பயிற்சி வகுப்பில் சுமார் 1,400 பேருக்கு மட்டுமே தபால் ஒட்டு வழங்கப்பட்டது. மீதியுள்ள அரசு ஊழியர்களுக்கு தபால் ஓட்டு வழங்கப்படவில்லை. இதனால், வாக்குச்சாவடியில் பணியாற்றும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

 இதுதொடர்பாக  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவரும், ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளருமான சுப்பிரமணி மற்றும் சங்க நிர்வாகிகள் நேற்று மதுரை கலெக்டர் நடராஜனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.பின்பு ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மதுரை மாவட்டத்தில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். இதில் 1,400 பேருக்கு மட்டுமே தபால் ஒட்டு கொடுக்கப்பட்டுள்ளது. மீதியுள்ளவர்களுக்கு இதுவரை கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து தேர்தல் அதிகாரியும், கலெக்டரிடம் முறையிட்டோம். அதற்கு அவர் வரும் 13ம் தேதி நடைபெறும் பயிற்சி வகுப்பில் அனைவருக்கும் தபால் ஓட்டு வழங்கப்பட்டு விடும் என தெரிவித்தார். நூறு சதவீதம் வழங்கப்படும் என எதிர்பார்க்கிறேன். அதுவரை பொறுத்திருப்போம். அதன்பின்பு அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும்’’ என்றார்.

Tags : siege ,office ,Collector ,Periyar ,
× RELATED காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை போராட்டம்