×

திருச்சியை 2வது தலைநகரமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

திருச்சி, ஏப். 9: திருச்சியில் தேமுதிக வேட்பாளர் இளங்கோவனுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தி–்ல் ஈடுபட்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் திருச்சியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் டாக்டர் இளங்கோவனை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று பிரசாரம் செய்தார். முன்னதாக மதுரையில் இருந்து வந்த அவருக்கு டிவிஎஸ் டோல்கேட் அருகே கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதை தொடர்ந்து தலைமை தபால் நிலையம், மேலப்புதூர், பாலக்கரை, காந்திமார்க்கெட், பெரியகடைவீதி, மலைவாசல், நந்தி–்கோவில் தெரு, ஆண்டார் வீதி, காளியம்மன்கோவில் தெரு ஆகிய பகுதியில் பொதுமக்களிடம் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

ஆண்டார் வீதியில் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், திருச்சிக்கு அரசு கலை மற்றும் பொறியியல் கல்லூரி கொண்டு வரப்படும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க நடிவடிக்கை எடுக்கப்படும். தனியார் நிறுவனங்களை மீட்கவும், வேலை வாய்ப்பினை வழங்கவும் தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தவும் ஸ்டார்அப் மையம் மற்றும் தொழிற்பயிற்சி மையம் அமைக்கப்படும். எம்ஜிஆரின் கனவுப்படி திருச்சியை 2வது தலைநகரமாக்க அனைத்து விதத்திலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசினார். இதில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் குமார் எம்பி மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags : Premalatha Vijayakanth ,capital ,Trichy ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக...