×

கந்தர்வகோட்டை தொகுதிக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வந்து சேர்ந்தது

கந்தர்வகோட்டை, ஏப்.9:  கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 237 வாக்குசாவடி மையங்களுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேற்று முழுமையாக வந்து சேர்ந்தது.புதுக்கோட்டை மாவட்டம் கந்தகர்வகோட்டை சட்டமன்றத்திற்கு உட்பட்ட 237 வாக்கு சாவடி மையத்திற்கு 20 சதவீதம் கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உட்பட மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வந்த விவிபேட் கருவிகளை தாசில்தார் கலைமணி மற்றும் அதிகாரிகள் பாதுகாப்புடன் தாலுகா அலுவலகத்தில் இறக்கி வைத்தனர். ஏற்கனவே கட்டுப்பாட்டு கருவிகள் வந்த நிலையில் தற்போது மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டது.

Tags : constituency ,Gandharvatai ,
× RELATED திருவள்ளூர் தொகுதி எம்.பி.யாக...