×

தா.பழூர் பகுதியில் கோடை கால நடவு செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரம்

தா.பழூர்,ஏப்.9: அரியலூர் மாவட்டம்   தா.பழூர் சுற்றி உள்ள மதனத்தூர், காரைக்குறிச்சி ,அருள்மொழி, ஸ்ரீ புரந்தான் உள்ளிட்ட பகுதிகளில் தற்பொழுது மூன்று மாத அறுவடை கால பயிராக சித்திரை கார் நடவு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.தற்போது கோடைகாலம் என்பதால் மின்மோட்டார் மூலம் தண்ணீர் இறைத்து இந்த நடவு பணி நடைபெற்று வருகிறது. குறுவை நடவு செய்வதற்கு முன்பாகவே குறுகிய காலத்தில் இந்த நெற்பயிர் அறுவடை செய்யப்படும் எனவும் அதற்கு தகுந்தார் போல் 45 என்ற நெல் ரகத்தை தேர்வு செய்து விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். தற்பொழுது போதுமான அளவு தண்ணீர் நீர்மட்டம் இருந்து தண்ணீர் வந்தாலும் பயிர்களுக்கு மழை  பெய்தால் மட்டுமே இந்த சாகுபடி சிறப்பாக அமையும் என்று விவசாயிகள் கூறுகின்றனர். மழை பெய்தால் சாகுபடி செய்யும் நிலங்கள் மட்டுமின்றி அனைத்து நிலமும் மழை நீரால் நனைந்து பூமி குளிர்ச்சி அடைவதால் நெல் பயிருக்கு அதிகப்படியாக தண்ணீர் இறைப்பது குறையும் எனவும், நெற்பயிரில் பூச்சித் தாக்கம் ஏற்படாமல் இருக்கும் என்றும், தற்போது நடவு செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் அதிகப்படியான மகசூலை கொடுக்கும் எனவும் விவசாயிகள் கூறுகின்றனர்.

அதுமட்டுமின்றி தா.பழூர் பகுதிகளில் எப்பொழுதும் நடவு பணி நடைபெற்றுக்கொண்டிருப்பதால் நிலையான கொள்முதல் நிலையம் ஒன்று எப்பொழுதும் இயங்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் தற்பொழுது நடவு செய்யப்பட்டுள்ள சித்திரை கார் நெல் அறுவடை முடியும் தருவாயில் இந்த பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் இல்லாமல் இருப்பதால் அறுவடை செய்யும் நெல்களை தனியார் வியாபாரிகள் மூலம் விற்பனை செய்யக் கூடிய சூழல் ஏற்படுகிறது. இதனால் விளைவிக்கப்பட்ட நெல்கள் விலை மதிப்பிழப்பு ஏற்பட்டு குறைவான விலைக்கு விற்க கூடிய சூழல் ஏற்படுகிறது. இதுவே இந்தப் பகுதியில் எப்பொழுதும் இயங்கக்கூடிய நெல் கொள்முதல் நிலையங்கள் இருந்தால் விவசாயிகள் நேரடியாக அரசு நிர்ணயித்த விலைக்கே நெல்களை விற்று விவசாயிகள் லாபம் அடைய முடியும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : season ,
× RELATED வலுக்கும் எதிர்ப்பு!: இ-பாஸ் முறையை...