×

பெரம்பலூர் தொகுதி அமமுக வேட்பாளர் ராஜசேகர் பிரசாரத்திற்கு செல்லாமல் முடக்கம்

திருச்சி,ஏப்.9: பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சிவபதியும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஐஜேகே சார்பில் போட்டியிடும் பாரிவேந்தரும் தேர்தல் களத்தில் அனல் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு வங்கிகளை தக்க வைக்கும் முயற்சியில் முழு வீச்சில் இறங்கி உள்ளனர். அதே வேலை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிடும் ராஜசேகரன் கட்சி நிர்வாகிகளை அனுசரிக்காமல், தனது பிரச்சாரத்தையும் சரிவர செய்யாமல் மெத்தன மாக இருந்து வருவதால் அவரது கட்சியினர் மத்தியில் சலிப்பு ஏற்பட்டுள்ளது. பெரம்பலூர் மக்களவை தொகுதி தேர்தல் களம் மிக சூடாகவே உள்ளது. மக்களவை உறுப்பினர் பதவி வகித்து தன் சேவையையும், தன் பெயரையும் வரலாற்றின் பக்கங்களில் படிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் தேர்தல் களத்தில் பாரிவேந்தர் பணி யாற்றியிருக் கிறார்.  அதே வேலை மாப்பிள்ளை என்று உரிமையாக அழைத்து தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் , நற்பெயரை பெற்று விட வேண்டும் என்ற முனைப்புடனும் மற்றும் தனது செல்வாக்கை அரசியல் களத்தில் மீண்டும் நிலை நிறுத்த வேண்டும் என்ற லட்சியத்துடன் சிவபதி தீவிரமாக பணியாற்றுகிறார்.

இதற்கு இடையே அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் ராஜசேகரன் தான் எடுத் ததே முடிவு, தான் வைத்ததே சட்டம் என்ற போக்கில் செயல்பட்டு நிர்வாகிகளை அனு சரிக் காமல் உள்ளார் என கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். ராஜசேகரனின் இந்த போக்கினால் கட்சி தொண்டர்களிடையே தொய்வு ஏற்பட்டுள்ளது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கிராமங்கள் தோறும் பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள், அவர்களின் குடும்பங்கள் அவரது உறவினர்கள் ஆகியோரின் வாக்குகளை குறி வைத்துள்ளனர். ஆனால் பிரச்சார களத்தில் யாரையும் வேட்பாளர் ராஜசேகரன் மதிக்காமல் தொண்டர்கள் பொறுப்பாளர்களின் ஆலோசனை ஏற்காமல் ராஜசேகரன் தனிச்சையாக செயல் படுவதால் ராஜசேகரனுக்கு மிகுந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அரசியல் விமர்சகர்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சியிலும் இவரே வேட்பாளர் , தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலும் இவரே வேட்பாளர் , தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தி லும் இவரே வேட்பாளர் என்ற சலிப்புடன் ராஜசேகரனை பார்க்கின்றனர். கடந்த தேர்தல் களில் போட்டியிட்ட போது ராஜசேகரன்  மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்து தான் இருப்பதை அடையாளப்படுத்திக் கொண்டு இருந்தார்.

ஆனால் தற்போது ராஜசேகரனுக்கு கட்சி நிர்வாகிகளின் ஒத்துழைப்பு இல்லாததாலும், பொது மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லாததாலும் தேர்தல் பணிகளில் நாட்டம் இல்லாமல் இருப்ப தாக அவர் சார்ந்த கட்சி நிர்வாகிகளே கருத்து தெரிவிக்கின்றனர். இது தவிர காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து ஜி கே வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு வந்த ராஜசேகரன் கொடி உயர பறக்காததால் அதிமுகவுக்கு வந்து சேர்ந்தார்.
அதிமுகவில் சுழன்றடித்த சூறாவளி காற்றில் டிடிவி தினகரன் பக்கம் வந்து பவ்யமாய் பொறுப் பேற்றுக் கொண்ட ராஜசேகரன், ராமன் வனதிற்கு சென்றபோது உடன் வந்த தம்பி லட்சுமணனை போல் தமாகாவில் இருந்து தன்னோடு பிரிந்து வந்தவர்கள் மட்டுமே அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தூண்கள் என நினைத்துக்கொண்டு அதிமுகவிலிருந்து பிரிந்து வந்த கட்சியினரை தொடர்ந்து புறக்கணிப்பதாகவும், ஓரங்கட்டுவதாகவும் ஜெ வின் உண்மை விசுவாசிகள் ரத்த கண்ணீர் வடிக்கின்றனர்.

ஒய்யாரக் கொண்டையாம் அவிழ்த்து பார்த்தால் உள்ளே ஈரும் பேனாம் என்ற கணக்கில், வேட்பாளர் ராஜசேகருக்காக டிடிவி தினகரன் முசிறியில் வந்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்களை கட்சி பேதமின்றி உரிய கவனிப் போடு அழைத்து வந்து கூட்டத்தை காட்டி நல்ல பெயரை ராஜசேகர் வாங்கி கொண்டா ராம். ஆனால் கூட்டத்தை கூட்டிய நிர்வாகிகளை கடுகளவும் மதிக்கவில்லை என தொண்டர்கள் புலம்புகின்றனர். பாரிவேந்தர் , சிவபதி இடையிலான போட்டியில் ராஜசேகரன் மூன்றாவது இடத்தை பிடிப் பாரா என்ற சந்தேகம் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அரசியல் ஞானம் கொண்ட ராஜசேகரன் தற்போது தேர்தல் பணியில் தீவிரம் காட்டாமல் பதுங்கி இருப்பது கையில் இருக்கும் காசை விட்டு விடாமல் பாதுகாக்க தான் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தொகுதிக்குள் பேசிக் கொள்வதை கேட்க முடிகிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் செலவில்லாமல் தொகுதிக்குள் சுற்றி வர வேண்டும். ஆகும் செலவை கட்சித் தலைமையும் உடன் இருக்கும் நிர்வாகிகளும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற கொள்கையோடு, அமைதிப்படை சத்யராஜ் பாணியில் ஜெயிச்சாலும் சரி, தோத்தாலும் சரி என்று அலட்டிக் கொள்ளாமல் ராஜசேகரன் தேர்தல் பணியாற்றி வருகிறார்.

Tags : Rajasekar ,Perambalur ,
× RELATED அதிமுகவை உடைக்கும் முயற்சி ஒருபோதும் நடக்காது: எடப்பாடி பழனிசாமி பேச்சு