பேராவூரணி அருகே மேலும் 2 கூரை வீடுகள் எரிந்து சாம்பல்

பேராவூரணி, ஏப். 9: பேராவூரணி அருகே உள்ள களத்தூர் கவரத் தெருவில் கடந்த 4ம் தேதி பார்வதி என்பருக்கு சொந்தமான கூரை வீடு மர்மமான முறையில் எரிந்து சாம்பலானது. கடந்த 7ம் தேதி இதே தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன், முத்துராமலிங்கம் ஆகியோருக்கு சொந்தமான 2 கூரை வீடுகளும் எரிந்து நாசமானது.

இந்நிலையில் நேற்று மதியம் இதே தெருவை சேர்ந்த ராணி, பாக்கியம் ஆகியோருக்கு சொந்தமான 2 கூரை வீடுகள் தீயில் எரிந்து சாம்பலானது. பேராவூரணி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இந்த பகுதியில் மர்மமான முறையில் தீவிபத்து நடந்து வருவதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : roof houses ,Perravoor ,
× RELATED டூவீலர் விபத்தில் 2 பேர் படுகாயம்