கடிச்சம்பாடி மாசிலா மணிஸ்வரர் கோயிலில் அரியவகை சிலை கண்டுபிடிப்பு

பாபநாசம், ஏப். 9: தொல்லியல் வல்லுனர் குடவாயில் சுந்தரவேலு வெளிட்டுள்ள அறிக்கை: பாபநாசம் அருகே கடிச்சம்பாடி மாசிலா மணிஸ்வரர் கோயில் முகப்பில் பிள்ளையார் சிலை உள்ளது. இது ஒரு எழில்மிகு படைப்பாகும். இதன் தனிச்சிறப்பு அம்சம் தனது ஊர்தி மூஞ்சுறு மீது ஏறி நின்ற நிலையில் காட்சி தருவதாகும். இது காணற்கரிய ஒன்று. தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் சிலைகள் இருந்தும் இவைகள் பத்ர மற்றும் பத்ம பீடங்களின் மீது இருக்குமாறு செய்விக்கப்பட்டுள்ளது.

ஒரு மீட்டர் உயரமுள்ள இச்சிலை மற்றும் துர்காதேவி, சங்கு ஊதும் பூத கணம், அமர்ந்த நிலையில் செவ்வக வடிவ குறுக்கு வெட்டு தோற்றத்தில் தும்பிக்கையுடன் மேலும் ஒரு விநாயகர், திருமால், அவரது நாச்சியார் கற்சிலைகளும் பிற்கால சோழர் ஆட்சியில் கி.பி 12ம் நூற்றாண்டில் செம்மையுற வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அழிந்துபோய் விட்ட அந்நாளைய ஆலயத்திற்கு உரியவை. தற்போதுள்ள கோயில் தற்காலத்தியது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

× RELATED கோயிலை உடைத்து கொள்ளை முயற்சி