×

தஞ்சை தமாகா வேட்பாளர் நடராஜன் மீது கடும் அதிருப்தி கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் இல்லாமலேயே பிரசாரம் பணத்தை கொடுத்து ஜெயிக்கலாம் என நம்பிக்கை

தஞ்சை, ஏப்.9: தஞ்சை மக்களவை தொகுதி தமாகா வேட்பாளர் நடராஜன் மீது அதிருப்தியில் உள்ள கூட்டணி கட்சியினர், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இல்லாமலேயே பிரசாரமா? பணத்தை கொடுத்து ஜெயித்து விடலாம் என நம்பிக்கையில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந் துள்ளது.
தஞ்சை தொகுதி நாடாளுமன்ற தேர்தல் வரும் 18ம் தேதி நடை பெற உள்ளது. இதற்காக அதிமுக தலைமையில் ஒரு அணியும், திமுக தலைமையில் ஒரு அணியும், அமமுக தலைமை யில் ஒரு அணியும் களம் இறங்கியுள்ளன. டெல்டா மாவட்டங்களில் பார்க்கும் இடங்களில் எல்லாம் கட்சி வேட்பாளர்களின் பிரசாரம் கோடை வெயிலை மிஞ்சும் வகையில் சூடு பறக் கிறது. அதுவும் தேர்தல் பிரசாரம் முடிய 8 நாட்களே உள்ளதால் வேட்பாளர்கள் தொகுதி முழுவதும் சுற்றி சுழன்று பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக கூட்டணியில் கூட்டணி கட்சியினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். அதிமுக கூட்டணியில் தேமுதிக, பா.ஜ.க., பா.ம.க., புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இதில் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சி நிர்வாகிகளை நாடாளுமன்ற தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் என்.ஆர்.நடராஜன், கூட்டணி கட்சியினரை கண்டு கொள்வதில்லையாம், மதிப்பது இல்லையாம் என குற்றஞ்சாட்டுகின்றனர்.

பல இடங்களில் பிரசாரத்திற்கு செல்லும்போது அந்தந்த பகுதி கூட்டணி கட்சியினருக்கு தகவல் கூட தருவதில்லையாம். இதனால் கூட்டணி கட்சியினர் கடும் அதிருப்தியில் உள்ளார் களாம். குறிப்பாக புதிய தமிழகம் கட்சியினரை தமாகா வேட்பாளர் மருந்துக்கு கூட மதிப்ப தில்லையாம். இதனால் அதிருப்தியில் உள்ள அக்கட்சியினர் மேலிடம் வரை புகாராக கொண்டு சென்றுள்ளதாக கூறுகின்றனர். கூட்டணி கட்சியினரை அழைத்தால் அவர்களுக்கு செலவு செய்ய வேண்டி வருகிறது என்ப தால் வேட்பாளர் நடராஜன் களத்தில் இறங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படு கிறது. இதனால் தஞ்சை நாடாளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி கட்சியினர் சோர் வடைந்துள்ளனர். வாக்குப்பதிவுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் அதிமுக கூட்ட ணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது அதன் வெற்றியை பாதிக்குமா? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். இது குறித்து அதிருப்தி அடைந்துள்ள கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கூறும்போது, அதிமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்தும் போது மேலிடத்தில் மதித்தார்கள். பின்னர் வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு அழைத்து மேடையில் மரியாதை கொடுத்தனர். ஆனால் அதன்பின் எல்லாம் தலைகீழாகி விட்டது. பிரச்சாரம் குறித்து எந்த தகவலும் எந்த ஒன்றியம், நகரம், கிளை நிர்வாகிகளுக்கு கொடுக்கப்பட வில்லை.

கூட்டணி நிர்வாகிகள், தொண்டர்கள் இல்லாமலேயே தமாகா வேட்பாளர் நடராஜன் பிரச்சாரம் செய்து வருகிறார். ஒவ்வொரு நாளும் எங்கு பிரச்சாரம் செய்கிறார் என்பது கூட தெரியவில்லை. இது குறித்து எங்களிடம் தெரிவிக்க விரும்புவதில்லை. இதனால் கடும் அதிருப்தியில் உள்ளோம். அதிமுக கூட்டணியில் எதற்கு இணைந்தனர்? எதற்கு இணைத்துக் கொண்டனர்? என்பதே விளங்க வில்லை. இது குறித்து தமாகா நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் என்.ஆர்.நடராஜனை சந்தித்து முறையிடலாம் என்றால் கூட அவரை சந்திக்க முடிய வில்லை. அங்கு பிரச்சாரத்தில் உள்ளார், இங்கு பிரச்சாரத்தில் உள்ளார் என்றே பதில் வருகிறது. தமாகாவை பொறுத்தவரை, வேட்பாளர்களுக்கு பணத்தை கொடுத்து ஈசியாக ஜெயித்து விடலாம் என நம்பிக்கையில் வேட்பாளர் உள்ளார். கூட்டணி கட்சியினரை மதித்து பிரசாரத்திற்கு அழைத்தால் முழு வீச்சில் பணியாற்றுவதோடு அவரை ஜெயிக்க வைக்கவும் தயாராக உள்ளோம் என்றனர்.

கட்சியை விட்டு விலகல் வேட்பாளர் நடராஜன் மீது கடும் அதிருப்தியால் தமாகா மாநில பொது குழு உறுப்பினராக இருந்த நானேந்திரன், தாராசுரம் தமாகா மாவட்ட பொது செயலாளராக இருந்த சண்முகம் ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் லோகநாதன் மற்றும் மாவட்ட விவசாய பிரிவு தலைவர் கிருஷ்ணசாமி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். வேட்பாளர் நடராஜன் மீது தொடர்ந்து அதிருப்தி ஏற்பட்டால் மீதி உள்ள தமாகாவினர் காங்கிரசில் ஐக்கியமாகும் நிலை உள்ளது.

Tags : Natarajan ,party ,coalition party organizer ,Thamaga ,volunteers ,
× RELATED ₹1.50 லட்சம் கொள்ளை