×

திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றிக்கு பாடுபட வேண்டும் திமுக தொழில் நுட்ப அணி கூட்டத்தில் தீர்மானம்

வேதாரண்யம், ஏப்.9: திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றிக்கு பாடபட வேண்டும் என திமுக தொழில் நுட்ப அணி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வேதாரண்யத்தில்  திமுக ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி ஆலோசனை கூட்டம் இந்திய கம்யூனிஸ்ட்  கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. வேதாரண்யம் நகர திமுக  செயலாளர் புகழேந்தி தலைமை வகித்தார். வேதாரண்யம் ஒன்றிய தகவல் தொழில் நுட்ப  அணி ஒருங்கிணைப்பாளர்கள் பழனிவேல் முகுந்தன் வரவேற்றார்.

கூட்டத்தில்   வேதாரண்யம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் நாகை தெற்கு மாவட்ட திமுக  தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பாரிபாலன், துணை  ஒருங்கிணைப்பாளர்கள் செல்வமுத்துகுமரன், செந்தில்நாதன், வேதாரண்யம் சட்டமன்ற  தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அருள்சேகர் உள்ளிட்ட  பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் நாகை மக்களவை தொகுதி  மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் செல்வராஜ் வெற்றிக்கு கடுமையாக  உழைப்பது. இளம் வாக்காளர்களை கவரும் வகையில் இணைய பிரசாரத்தை  வீரியமாக செய்வது,  உதயநிதி ஸ்டாலின் நாகை பிரசார நிகழ்ச்சியில் பெரும்  திரளாக கலந்து கொள்வது உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.    வேதாண்யம் நகர திமுக தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கவியரசன் நன்றி கூறினார்.

Tags : alliance ,DMK ,party candidate ,victory ,
× RELATED தேர்தல் பணிகள் குறித்து திமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம்