×

அந்தந்த ஒன்றியங்களிலேயே தேர்தல் பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

வேதாரண்யம், ஏப்.9: தமிழக தேர்தலில் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் தேர்தல் பயிற்சி வகுப்பினை அந்ததந்த  ஒன்றியங்களிலேயே  நடத்த வேண்டும் என தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. வேதாரண்யம் பாரதிதாசன் பல்கலை கழக கல்லூரியில் நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்ற உள்ள ஆசிரியர்களுக்கு 2ம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இப்பயிற்சியில் நாகை மக்களவை தொகுதியில் தேர்தல் அலுவலர்களாக பணியாற்ற உள்ள நாகை, கீவளூர், சீர்காழி, பூம்புகார்,  மயிலாடுதுறை, வேதாரண்யம் பகுதிகளை சேர்ந்த 1194 ஆசிரியர், ஆசிரியர்கள் பயிற்சிக்கு வந்திருந்தனர்.  மயிலாடுதுறை சீர்காழி, பூம்புகார் உள்ளிட்ட நீண்ட தொலைவிலிருந்து வேதாரண்யம் வருவதற்கு  குறைந்த பட்சம் 100 முதல் 120கி.மீ வரை பேருந்தில் 4முதல் 5மணி நேரம் பயணித்து வரவேண்டியுள்ளது. அங்கிருந்து வேதாரண்யத்திற்கு பயிற்சிக்கு வரும் ஆசிரியர்கள் பயண களைப்பு ஏற்படுவதுடன் மன சோர்வும், காலவிரையமும் ஏற்படுகிறது. இதனால் சில மணிநேரம் நடைபெறும் தேர்தல் பயிற்சிக்கு நீண்ட தூரம் பயணித்து வரவேண்ய சூழ்நிலை உள்ளது. தேர்தல் பயிற்சி என்பது ஒரே மாதிரியாகத்தான்  அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வழங்கப்படுகிறது.  

எனவே ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் தேர்தல் பயிற்சி வகுப்பனை அந்தந்த ஒன்றியங்களில் வழங்க வேண்டும். அப்படி வழங்கினால் தான் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் குறித்த காலத்தில் அங்கு சென்று மன உளைச்சல் இல்லாமல் தேர்தல் பயிற்சியினை பெறமுடியும். சென்ற தேர்தலுக்கு முன் அந்தந்த ஒன்றியங்களிலே தேர்தல் பயிற்சியினை நடத்த வேண்டும் என வேதாரண்யம் தாலுகா அலுவலகம் முன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் எதிர்வரும் தேர்தல் காலங்களில் தேர்தல் பயிற்சி வகுப்பினை அந்தந்த ஒன்றியங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என கூறினார். ஆனால் அதற்கான நடவடிக்கை எதுவுமே எடுக்காமல் மீண்டும் பழைய முறைப்படியே வெகு தூரத்திலேயே பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. எனவே தேர்தல் பயிற்சி வகுப்புகள் அந்தந்த ஒன்றியங்களில் நடத்த வேண்டும் மேலும் தேர்தல் பணிகளையும் அந்தந்த ஒன்றியத்தில் அல்லது அருகருகே உள்ள ஒன்றியங்களில் தேர்தல் பணி வழங்க வேண்டும் என தமிழக  ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர்  பார்த்தசாரதி கோரிக்கை விடுத்துள்ளார். 

Tags : Primary School Teacher Coalition ,unions ,
× RELATED அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி...