×

செம்பனார்கோவில் வேலன் வாய்க்காலில் மழைநீர் வடிகாலில் வந்து கலக்கும் கழிவுநீர் பொதுமக்கள் அச்சம்

செம்பனார்கோவில், ஏப்.9: நாகை மாவட்டம், செம்பனார்கோவில் வேலன் வாய்க்காலில் சுகாதாரத்தை கெடுக்கும் வகையில் சாக்கடை கழிவுநீர் மழைநீர் வடிகால் மூலம் கலக்கப்படுவதால் அப்பகுதி மக்கள் சுகாதார கேடு ஏற்பட்ட நிலையில் வசித்து வருகின்றனர். செம்பனார்கோவில் வேலன் வாய்க்கால் காவிரியிலிருந்து பாசன வாய்க்காலாக பிரிந்து விவசாயிகளுக்கு விவசாயம் செய்வதற்கு ஏதுவாக திகழ்ந்து வந்தது.  ஆனால் சில வருடங்களாக போதிய மழை இல்லாமலும், காவிரியில் சீரான தண்ணீர் இல்லாமல் இருந்ததால் பல வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் தூர்ந்து போய் செடி, கொடிகளுடன் காடு மண்டி கிடந்தது.  இதேபோல் வேலன் வாய்க்காலும் தூர்வாராமல் செடி, கொடிகளுடன் காடு மண்டி கிடந்தது. இந்த நிலையில் தற்பொழுது வேலன் வாய்க்கால் தூர்வாரப்பட்ட போதுதான் சில அதிர்ச்சி தரும் வகையில் அப்பகுதி மக்களுக்கு தெரிந்தது, வாய்க்காலில் சாக்கடை கழிவு நீர் கலக்கப்படுகிறது என்று. இதில் என்னவென்றால் மழைநீர் வடிகாலுக்காக அரசு அமைத்த வடிகாலின் மூலமாக பல ஹோட்டல்கள் பின்புறத்தில் குழாய் மூலமாகவும், கழிவுநீர் செல்வதற்கு சிமெண்ட் கட்டைகளை கட்டி மழைநீர் வடிகாலுடன் சேர்த்து விட்டுள்ளனர் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.  மேலும் இப்பகுதியில் உள்ள பல பேர் வீடுகள் வேலன் வாய்க்கால் பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் கழிப்பறை தொட்டி கட்டிருந்தாலும் அதிகாரிகள் பார்வைக்காக வைத்துக் கொண்டு பைப்புகளை போட்டு வேலன் வாய்க்காலில் நேரடியாக கலந்து வருகின்றனர்.

ஏற்கனவே சாக்கடை கழிவுநீர் தேங்கி வரும் நேரத்தில் மற்றொரு பகுதியிலிருந்து கழிப்பறை நீரும் நேரடியாக கலக்கப்பட்டு வேலன் வாய்க்காலை சுகாதார கேட்டின் உச்சத்தில் நிற்கிறது.  இப்பகுதி மக்கள் துர்நாற்றத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.  இவ்வழியாகத்தான் செம்பனார்கோவில் ஒன்றிய அலுவலகம், ஊராட்சி அலுவலகம் செல்ல வேண்டும்.  ஒவ்வொரு நாளும் ஒன்றிய வட்டார அலுவலர், ஊராட்சி செலயர் ஆகியோர் பார்த்துக் கொண்டுதான் செல்கின்றனர்.  ஆனால் எந்தவித தீவிர நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  இப்பகுதியில் செல்வாக்கு உள்ளவர்கள் அதிகம் என்பதால் கேட்பதற்கே அதிகாரிகள் அச்சப்படுவதற்காக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.  பெயர் அளவிற்கு ஊராட்சி நிர்வாகம் மூலம் நோட்டீஸ் வழங்கினர்.  ஆனால் எந்தவொரு மாற்றம் இல்லை.  இவ்வாய்க்காலை ஒட்டி வீடுகள், அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி போன்ற குடி
யிருப்புகள் இருக்கிறது.  

அவ்வளவு நாற்றத்துடன் வாழ்க்கையை நகர்த்துகின்றனர்.  இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதுடன், நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது.  ஒன்றிய அதிகாரிகள் தீவிரப்படுத்தி கழிவுநீர், கலப்படத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அப்படி இல்லையொன்றால் மாவட்ட நிர்வாகம் கவனத்திற்கு கொண்டு செல்லுவோம் என்று அப்பகுதி மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

Tags : valley ,Sampanarkovu Velan ,
× RELATED தத்தனூர் கீழவெளியில் பெயர் இல்லை...