×

எட்டயபுரத்தில் முத்துஸ்வாமி தீட்சிதர் ஜெயந்தி

எட்டயபுரம், ஏப். 9:  எட்டயபுரத்தில் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதருக்கு கடந்த இருநாட்களாக நடந்த 245வது ஜெயந்தி விழாவில் இசைக் கலைஞர்கள், இசைக் கல்லூரி மாணவ மாணவிகள் கீர்த்தனைகள் பாடி இசையால் ஆராதனை செய்தனர். எட்டயபுரத்தில் முத்துஸ்வாமி தீட்சதரின் 245வது ஜெயந்தி விழா இரு நாட்கள் நடந்தது. சத்குரு சங்கீத வித்யாலயா இசைக் கல்லூரி முதல்வர் பாலநந்தகுமார் தலைமை வகித்தார். நாதஜோதி முத்துஸ்வாமி தீட்சதர் மெமோரியல் கமிட்டி துணைத்தலைவர் ராதிகாராமன் வரவேற்றார். சென்னை டாக்டர் கிரிஜா ஹரிஹரன், சுந்தர், உமா, பாலா, பாரதி வெங்கட்ராமன், மீனாட்சி, திருவானைக்காவல் கணேஷ்ராமன், நெல்லை சரஸ்வதி ஞானசம்பந்த கலாலயம், நெல்லை வீணை சரஸ்வதி குழுவினர், தூத்துக்குடி ஜெயலட்சுமி வெங்கட்சுப்பிரமணியன் குழுவினர், சாய்கிருபா குழுவினர். பராசக்தி மகளிர் கல்லூரி முதல்வர் திரிபுரசுந்தரி, சென்னை வசந்தி, செல்வி, காயத்ரி, கடப்பா ராஜிவ் காந்தி பல்கலைக்கழக லட்சுமி குழுவினர், ஹைதராபாத் துர்காபாய்தேஷ்முக் மகிளா சபா கலைக்கல்லூரி ராமபிரபா மற்றும் குழுவினர், அண்ணாமலை பல்கலைகழக அருட்செல்வி, குமார், இலங்கை பிரியதர்ஷினி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகைதந்த ஏராளமான இசைக்கலைஞர்கள் கீர்த்தனைகள் பாடி இசையால் முத்துஸ்வாமி தீட்சிதருக்கு அஞ்சலி செலுத்தினர்.  ஏற்பாடுகளை நாதஜோதி முத்துஸ்வாமி தீட்சதர் மெமோரியல் கமிட்டி தலைவர் ராமன்,  துணைத்தலைவர் ராதிகா ராமன் இணைச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட கமிட்டியினர் செய்திருந்தனர்.

Tags : Muthuswami Diddichatar Jayanthi ,Ettayapuram ,
× RELATED கோவில்பட்டி, எட்டயபுரம் பகுதியில்...