×

திருச்செந்தூரில் இன்று ராஜகண்ணப்பன் பிரசாரம்

தூத்துக்குடி, ஏப். 9: திருச்செந்தூரில் இன்று (9ம் தேதி) நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசுகிறார்.மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் தூத்துக்குடி மக்களவைத்  தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி எம்.பி.யை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் பிரசாரம் செய்கிறார். அதன்படி இன்று (9ம் தேதி) மாலை 6 மணிக்கு திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி எதிரேயுள்ள மைதானத்தில் பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்றுப்  பேசுகிறார். இதில் கட்சி நிர்வாகிகள், சார்பு அணியினர் மற்றும் கூட்டணி கட்சியினர், தொண்டர்கள் திரளாகப் பங்கேற்குமாறு தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார். இதேபோல் இக்கூட்டத்தில் யாதவ சமுதாயத்தினரும் தவறாமல் பங்கேற்குமாறு யாதவர் பாதுகாப்பு பேரவையினரும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags : Rajakannappan ,campaign ,Tiruchendur ,
× RELATED கோடை விடுமுறையை கொண்டாட கொளுத்தும் வெயிலிலும் குவிந்த பக்தர்கள்