×

லாலாப்பேட்டை அருகே துணிகரம் பகவதியம்மன் கோயிலில் பணம், பொருள் திருட்டு

கரூர், ஏப். 9: கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகே பகவதியம்மன் கோயிலில் நடந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அடுத்துள்ள கோடங்கிப்பட்டியில் பகவதியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் பூசாரி கருணாகர பெருமாள் லாலாப்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கடந்த 5ம் தேதி இரவு மர்ம நபர்கள் கோயிலின் முன்பக்க கதவை உடைத்து ரூ.2 ஆயிரம் பணம் மற்றும் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள கலச வெண்கலப் பொருட்களை திருடி சென்றதாக கூறியிருந்தார். அதன்பேரில் லாலாப்பேட்டை போலீசார் இந்த பகுதியை சேர்ந்த மூன்று வாலிபர்களிடம்
விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மணல் அள்ளிய டாரஸ் லாரி பறிமுதல்: கரூர் மாவட்டம் வாங்கல் அடுத்துள்ள தன்னாசி கவுண்டன்புதூர் பகுதியில் டாரஸ் லாரியில் மணல் ஏற்றப்படுவதாக இந்த பகுதி விஏஒ வாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அந்த பகுதியில் 6 யூனிட் மணலுடன் நின்று கொண்டிருந்த டாரஸ் லாரியை பறிமுதல் செய்து தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags : Lalapettai ,Bhagavathi Amman ,
× RELATED பணம் பறித்த வாலிபர் கைது