×

கரூர் தொகுதியில் எனது வெற்றி உறுதியாகி விட்டது கிருஷ்ணராயபுரம் பகுதியில் காங். வேட்பாளர் ஜோதிமணி பிரசாரம்

கரூர், ஏப். 9: கரூர் மக்களவை தொகுதியில் எனது வெற்றி உறுதியாகி விட்டது என்று கிருஷ்ணராயபுரம் பகுதியில் பிரசாரம் செய்த காங். வேட்பாளர் ஜோதிமணி கூறினார். கரூர் மக்களவை தொகுதி திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி நேற்று கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றியம், பேரூராட்சியில் கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரித்தார். ஆரத்தி எடுத்த பெண்களின் காலில் விழுந்து ஆசிபெற்றார். அவர் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளாக எம்பியாக இருப்பவர் மக்களையும் சந்திக்கவில்லை. எததையும் செய்யவில்லை. எங்கு சென்றாலும் தண்ணீர் பிரச்சனை என்கின்றனர். இரு தொகுதிகளை தவிர எங்கும் அரசு கல்லூரிகள் இல்லை. ஆனால் அவர் 45 கல்லூரிகளை நடத்துகிறார். தொகுதியில் உள்ள ஏழை மாணவர் ஒருவருக்கு கூட சீட் கொடுக்கவில்லை. எனது வெற்றி உறுதியாகி விட்டது. சுற்றுப்பயணத்தில் மக்கள் திரளுவதால் குறிப்பிட்ட நேரத்திற்கு போக முடியவில்லை. வெற்றிபெற்றதும் நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகளை பற்றித்தான் மக்கள் என்னிடம் கூறி வருகின்றனர். 100 நாள் வேலையில்லை. வேலை செய்தாலும் கூலி தாமதம் ஆகிறது என பல பிரச்னைகளை கூறினர், அவற்றை நிறைவேற்ற பாடுபடுவேன் என்றார்.

கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜி பேசுகையில், ஜோதிமணிக்கு காங்கிரஸ் தலைவர் சீட் கொடுத்துள்ளார். நேரடி தொடர்பில் உள்ள அவர் பெற்றி பெற்றால் பிரதமருடன் பேச முடியும். தம்பிதுரையால் எடப்பாடியிடம் கூட பேச முடியாது. தொகுதி மக்கள் பிரச்னைகள் தீர்க்கப்படாமல் இருக்கிறது. ரயில்வே கேட் பிரச்னை, பஸ், சாலை, குடிநீர் பிரச்னைகள் தீர்க்கப்படும். ரயில்வே மேம்பாலம்அமைக்க டெல்லியில் செல்வாக்கு இருந்தும் எம்பி முயற்சி எடுக்கவில்லை. பிரதமரே இவரைக்கண்டால் சபையில் எழுந்து நிற்பார். ஆனால் ரயில்வே கேட் பிரச்சனையை பற்றி பேசவில்லை. எதிர் அணிக்கு வாக்களித்தால் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்த்தி விடுவார்கள். கேபிள் கட்டணத்தை உயர்த்தி விட்டார்கள். வீட்டில் டிவி பார்க்கவே ரூ.250 தேவைப்படுகிறது. விலைவாசியை சமாளிக்க முடியாமல் ஒவ்வொருவரும் அதிகம் உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். எனவே ஜோதிமணிக்கு ஆதரவளிக்குமாறு கேட்டு கொண்டார். நிர்வாகிகள் நன்னியூர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் ரவிராஜா, முன்னாள் எம்எல்ஏ காமராஜ், மகாலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : victory ,constituency ,Karur ,Jyothimani ,area ,Krishnarayapuram ,
× RELATED வங்கியாளர்கள் கண்காணிக்க வேண்டும்...