×

திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஏஐடியூசி மீனவர் தொழிலாளர் சங்கம் ஆதரவு 5நாட்கள் பிரசாரம் செய்ய முடிவு

முத்துப்பேட்டை ஏப்.9: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் தமிழ்நாடு ஏஐடியூசி மீனவத்தொழிலாளர் சங்க கூட்டம்  மீரா முகைதீன் தலைமையில் நடைபெற்றது.   இதில் மாநில பொதுச்செயலாளர; சின்னத்தம்பி பேசினார். இதில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் நாகை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராஜ், திருவாரூர்சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் ஆகியோரை ஆதரித்து எதிர்கால மீனவர்களின் நலன் கருதி தமிழ்நாடு ஏஐடியூசி மீனவர் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மீனவ கிராமங்களுக்கு சென்று வாக்கு சேகரிப்பது.வரும் 11 ம்தேதி முதல் 15ம்தேதி வரை 5 நாட்கள் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர்மாவட்டத்திலுள்ள அனைத்து மீனவ கிராமத்திற்கு சென்று ஏஐடியுசி மீனவர் சங்கத்தின் சார்பில் திமுக கூட்டணிக்கு  பிரசாரம் செய்வது.

2018 ஆம் ஆண்டு இலங்கை பாராளுமன்றத்தில் புதிய சட்டத்தின்படி எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக தூத்துக்குடியை சேர்ந்த 8 தமிழக மீனவர;களை சிறைபிடித்து அவர;களுக்கு சிறைத்தண்டனையும் ஒரு மீனவருக்கு 60 லட்சம் வரை அபராதம் விதித்தும் தமிழக மீன்பிடி படகுகளை இலங்கையின் தேசிய சொத்தாக அறிவித்து உள்ளது அதற்கு மத்திய அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை இதில் இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட அனைத்து படகுகளையும் விடுவிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசை இக்கூட்டம் கண்டிக்கிறது. கடலோர மீன்பிடி தொழிலாளர;களின் வாழ்வாதாரத்தை பறித்திடும் சாகர்மாலா, ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை கைவிடாத மத்திய அரசை கண்டிப்பது. 2018 ம் ஆண்டு இறுதியில் கஜா புயால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்காததை கண்டித்தும் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மீன் வளர்ப்பு பண்ணை குளம் மற்றும் மீன் வளர்ப்பு பண்ணை குட்டை களுக்கு முறையாக நிவாரணம் வழங்க வேண்டும் மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத செயல்பாட்டை விளக்கி  விரைவில் தேர்தல் பிரச்சாரம் செய்வது  உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Tags : alliance candidates ,DMK ,AITUC Fishermen ,Workers Union ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி