×

மன்னார்குடி அருகே வடுவூர் கோதண்டராம சுவாமி கோயிலில் ராமநவமி பெருவிழா 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்

மன்னார்குடி, ஏப்.9: வடுவூர் கோதண்டராம சுவாமி கோயிலில் ராமநவமி பெருவிழா  வரும் 13ம்  தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகில் பிரசித்தி பெற்ற வைணவ தலமான  வடுவூரில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ்  பிரசித்தி பெற்ற  கோதண்டராம சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில்  ஆண்டுதோறும் ராமநவமியையொட்டி 10 நாட்கள்  திருவிழாவும் அதனை தொடர்ந்து 24 நாட்கள் விடையாற்றி விழாவும்  நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் இந்தாண்டுக்கான ராமநவமி பெருவிழா வரும் 13ம் தேதி சனிக் கிழமையன்று காலை 10.30 க்கு மேல் 11.15 க்குள்கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று கோயிலில் ராமர் சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கருட சின்னம் வரையப் பட்ட கொடி பூஜை செய்துஏற்றப்படும். அப்போது கோதண்டராமர் வில்லேந்திய திருக்கோலத்தில் பக்தர் களுக்கு அருள்பாலிப்பார். கொடி மரம், தர்ப்பைப்புல், மாவிலை மற்றும் வஸ்திரம் கொண்டு அலங்கரிக்கப்படும்.கொடி ஏற்றப்பட்ட பின்னர் ஒரே சமயத்தில் கொடி மரம் மற்றும் சுவாமிக்கு தீபாராதனை நடைபெறுவது விசேசம்.தினமும் வெவ்வேறு வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறவுள்ளது. இதில் முக்கிய விழாக்களான  15ம் தேதி வெள்ளி சேச வாகனமும், 16ம் தேதி கருட சேவையும், 19 ம்தேதி திருக்கல்யாண உற்சவமும், 21ம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறும். அதனை தொடர்ந்து 24 நாட்கள்  விடையாற்றி உற்சவம் நடை பெறும். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள்  மற்றும் தீட்சிதர்கள், கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags : celebrations ,Ramanavami ,Mannargudi ,Vaduvur Kothandaram Swamy Temple ,
× RELATED மன்னார்குடி அரசு மருத்துவமனையில்...