×

2013ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது முத்துப்பேட்டை தனி தாலுகா அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு

முத்துப்பேட்டை, ஏப்.9: முத்துப்பேட்டை தனிதாலுகா ஆக்கப்படும் என 2013ம் ஆண்டு  அரசாணை வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்படுமா என மக்கள் எதிர்பார்த்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு தனி தாலுகாவாக செயல்படும் என கடந்த 2011ம் ஆண்டு திமுக ஆட்சியில்  கடைசி நேரத்தில்  அறிவிக்கப்பட்டது.  இதில் எந்தெந்த கிராமங்களை சேர்க்க வேண்டும் எனவும் ஒரு வரைவுபட்டியலும் தயார் செய்யப்பட்ட நிலையில்  2011 சட்டமன்றத் தேர்தல் வந்துவிட்டது. பின்னர்  இந்த அறிவிப்பு அடுத்து வந்த அதிமுக ஆட்சியாளர்களால் கிடப்பில் போடப்பட்டது. பின்னர் இந்த தனி தாலுக்கா திட்டத்தின் அவசியம் குறித்து அறிந்த ஜெயலலிதா தலைமையிலான அரசு மீண்டும் கையிலெடுத்து 2013ம் ஆண்டு இதற்கான அரசாணை வெளியிட்டதுடன், மன்னார்குடி தாலுகாவில்  பாலையூர் பிர்காவில் உள்ள 18 வருவாய் கிராமங்களும், திருத்துறைப்பூண்டி தாலுகாவில் இடம்பெற்றுள்ள முத்துப்பேட்டை பிர்காவுக்கு உட்பட்ட 15 வருவாய் கிராமங்களையும் இணைத்து புதிய தாலுகா செயல்படும் என 20.2.2013ல் அரசாணையையும், அதனைத் தொடர்ந்து  அரசிதழிலும் வெளியிட்டனர்.

அந்த அரசாணையில் முத்துப்பேட்டை  தாசில்தார்  அலுவலகத்தில் பணியாற்ற வேண்டிய   தாசில்தார் உள்ளிட்ட 25 பணியிடங்களையும் அறிவித்தனர். அதுபோல்  தாலுகா அலுவலகம் கட்டுவதற்கு தற்போது கோவிலூர் பைபாஸ் வனத்துறை அலுவலகம் உள்ளபகுதியில் இடம் ஒதுக்கீடும் பெறப்பட்டது. தற்போது ஆதார்கார்டுக்கு இந்த இரண்டு பிர்காவும் முத்துப்பேட்டை தாலுகாவில் உள்ளதாகவே காட்டப்படுகின்றன. சமீபத்தில் கூத்தாநல்லூர் தாலுகா அறிவித்தபோது ஏற்பட்ட மாற்றங்களுக்காக தமிழக அரசு அரசிதழில் வெளியிட்ட  மன்னார்குடி, நீடாமங்கலம், கூத்தாநல்லூர் தாலுகாவில் இடம்பெற்றுள்ளன. வருவாய் கிராமங்கள் பட்டியலில் பாலையூர் பிர்கா மன்னார்குடி தாலுகா பட்டியலில் இடம்பெறவில்லை. முத்துப்பேட்டை தாலுகாவில் ஏற்கனவே பாலையூர் பிர்கா  சேர்க்கப்பட்டுவிட்டதால் பெயரளவில் பாலையூர் பிர்கா மன்னார்குடி தாலுகாவில் தற்சமயம் இடம்பெற்றிருந்தாலும் அதனை  சட்டப்படி அறிவிக்க முடியாத நிலைக்கு வருவாய்த்துறை தள்ளப்பட்டுவிட்டது. இப்படி மக்கள் போராடி பெறவேண்டிய அனைத்து விஷயங்களுக்கும் உரிய ஒப்புதலை கடந்த 2013ம் ஆண்டிலேயே தமிழக அரசு வழங்கிவிட்ட நிலையில் தற்போதைய  தமிழக முதல்வர் அல்லது துறை சார்ந்த அமைச்சர; தனிதாலுக்காவாக செயல்படும் என அறிவிக்கவில்லை என்பதற்காக  முத்துப்பேட்டை தாலுகா நடைமுறைக்கு வராமல் உள்ளது.

இந்தநிலையில் முத்துப்பேட்டை பகுதியில் உலக புகழ்பெற்ற ஜாம்புவான்னோடை தர்கா, ஆசியாவிலேயே  மிகப்பெரிய அலையாத்திகாடுகள், லகூன் என்ற அறிய சுற்றுலாபகுதி, உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம், தொண்டியக்காடு கடல் திட்டு, கடல் நடுவே உள்ள மன்னாரன் தீவில் உள்ள நல்ல தண்ணீர்ஊற்று, புகழ்பெற்ற தில்லைவிளாகம் ராமர;கோவில், பேட்டை சிவன் கோவில், கோவிலூர்; பெரிய நாயகி கோவில், ஆகிய முக்கிய மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க பகுதிகள் உள்ளன. அதேபோல் இருபதுக்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசுடமையக்கப்பட்ட வங்கிகள், தனியார்  மற்றும் மருத்துவமனைகள், பல்வேறு துறை அலுவலகங்கள் உள்ளன. அதனால் தினந்தோறும் அதிகளவில் சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். அதனால் முத்துப்பேட்டை பேரூராட்சி நகரம் வளர்ந்து வரும் ஒரு பகுதியாக உள்ளது. அதனால் இப்பகுதி மக்களும் அதேபோல் முத்துப்பேட்டையை சுற்றியுள்ள 38 வருவாய் கிராம மக்களின் உள்ளடக்கிய நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்களின்  நீண்ட நாள் கோரிக்கையான இந்த தனி தாலுகா அறிவிப்பை நடைமுறை படுத்தவேண்டும்   என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், வர்த்தககழக நிர்வாகிகள்  கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Tags : Government ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...