×

மாட்டு வண்டி பந்தயம் மதுரை, தூத்துக்குடி முதலிடம்

சாயல்குடி, ஏப். 8: கடலாடி அருகே ஆப்பனூர் தெற்குகொட்டகை கிராமத்தில் உள்ள பீலிங்கன் முனீஸ்வரர் கோயில் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி மூன்று பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. போட்டியை அதிமுக ஒன்றிய செயலாளர் முனியசாமி பாண்டியன் துவங்கி வைத்தார். பெரியமாடு, நடுமாடு, பூச்சிட்டு என மூன்று பிரிவுகளாக பந்தயம் நடந்தது. ஆப்பனூர் தெற்கு கொட்டகை முதல் கடலாடி-முதுகுளத்தூர் சாலையில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரையிலான பெரியமாடுகள் போட்டியில் 14 மாட்டுவண்டிகள் கலந்துகொண்டது. இதில் சித்திரங்குடி ராமமூர்த்தி மாடுகள் முதலிடத்தையும், மதுரை மேலூர் சந்திரன் மாடுகள் இரண்டாம் இடத்தையும், மதுரை ஆத்துபாலம் அழகர்மலையான் மாடுகள் மூன்றாம் இடத்தையும் பெற்றன.

சுமார் 7 கிலோமீட்டர் தூரம் நடந்த நடு மாடுகள் பந்தயத்தில் 9 மாட்டு வண்டிகள் கலந்துகொண்டது. இதில் தூத்துக்குடி மாவட்டம் வீரநாயக்கன்தட்டு மாடுகள் முதல் இடத்தையும், தஞ்சாவூர் மாவட்டம், வெட்டு பூக்கொல்லை மாடுகள் இரண்டாமிடத்தையும், கடலாடி எம்.கரிசல்குளம் பாண்டித்தேவர் மாடுகள் மூன்றாம் இடத்தையும் பெற்றது. சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்த பூச்சிட்டு மாடுகள் போட்டியில் 12 மாட்டுவண்டிகள் கலந்துகொண்டது. இதில் திருநெல்வேலி மாவட்டம், கடம்பூர் கருணாகர ராஜா மாடுகள் முதல் இடத்தையும், மதுரை அவனியாபுரம் முருகன் மாடுகள் இரண்டாம் இடத்தையும், வைகுண்டம் சிங்கிலிபட்டி சங்குசாமி மாடுகள் மூன்றாம் இடத்தையும் பெற்றது. முதல் மூன்று இடங்களை பெற்ற மாடுகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது, மாடு ஓட்டி மற்றும் சாரதிக்கு பரிசுகளும், பாத்திரங்களும் வழங்கப்பட்டது.

Tags : race car race ,Madurai ,Thoothukudi ,
× RELATED மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் கனமழை