×

பள்ளி ஆண்டு விழாவில் மாணவிகளின் கலை நிகழ்ச்சி

தொண்டி, ஏப்.8: தொண்டி அருகே தினைக்காத்தான்வயல் அரசு உயர் நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. மாவட்ட கல்வி அலுவலர் பிரேம் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் தமிழரசி, ஜெயம் முன்னிலை வகித்தனர். உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விஜயகுமார் வரவேற்றார். தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை லதா பள்ளியின் செயல்பாடுகள் மற்றும் மாணவர்களின் கல்வி திறன் குறித்து பேசினார். வனஜா ஆண்டறிக்கை வாசித்தார். மாணவர்களின் கலை நிகழ்ச்சி, நாடகம், பேச்சு போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்ப்பட்டது. ஆசிரியர் பயிற்றுனர் அப்துல் சமீல், ஆசிரியர்கள் அமுதா, சுரேஷ் கண்ணன், தனலெட்சுமி உட்பட பெற்றோர், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : School Annual Festival ,
× RELATED மேமணப்பட்டி அரசு பள்ளி ஆண்டு விழா