×

வத்திராயிருப்பு பகுதியில் திமுகவினர் விறுவிறு: அதிமுகவினர் ‘சைலண்ட்’

வத்திராயிருப்பு, ஏப். 7: வத்திராயிருப்பு ஒன்றியத்தில் திமுகவினர் விறுவிறுவென தேர்தல் வேலையை தொடங்கியுள்ள நிலையில், அதிமுகவினர் ஆர்வம் காட்டாமல் அமைதியாக உள்ளனர்.தென்காசி மக்களவை தொகுதி திமுக வேட்பாளராக தனுஷ்குமாரும், அதிமுக கூட்டணி புதிய தமிழகம் கட்சி வேட்பாளராக, அக்கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும், அமமுக வேட்பாளராக பொன்னுத்தாயும் போட்டியிடுகின்றனர். தென்காசி மக்களவை தொகுதி அதிமுக கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டதால், வத்திராயிருப்பு ஒன்றியத்தில் அதிமுகவினர் ‘சைலண்டாக’ உள்ளனர்.திமுக பிரசாரம் விறுவிறுஇதேவேளையில், திமுகவினர் தேர்தல் வேலையை சுறுசுறுப்பாக பார்த்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன், வத்திராயிருப்பில் திமுக தேர்தல் அலுவலகத்தை விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்து, வேட்பாளர் தனுஷ்குமாரை அறிமுகம் செய்து வைத்தார். அதனுடன் திமுக மற்றும் கூட்டணி கட்சியினரின் ஊழியர்களின் கூட்டம் நடைபெற்றது.இதையடுத்து திமுக மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் வீடுகள் மற்றும் முக்கிய இடங்களில் சின்னங்களை வரைந்து பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். திமுக பிரசார வாகனங்கள் கிராமப்புறங்களில் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன், திமுக எம்பி திருச்சி சிவா வத்திராயிருப்பில் தனுஷ்குமாரை ஆதரித்து வாக்கு சேகரித்தார். வத்திராயிருப்பு ஒன்றியத்தை பொறுத்தவரை திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுகவினர் ‘சைலண்ட்’வத்திராயிருப்பில் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் திறக்கப்படவில்லை. இதனால், அதிமுகவினர் சைலண்டாக உள்ளனர். மக்களவை தொகுதியை கூட்டணி கட்சிக்கு கொடுத்ததால், சோர்வடைந்துள்ளனர். மேலும், அதிமுக வேட்பாளர் என்றால் பணப்புழக்கம் தாராளமாக இருக்கும் என்கின்றனர். டாக்டர் கிருஷ்ணசாமியும் இப்பகுதிக்கு இன்னும் பிரசாரத்திற்கு வரவில்லை. அதிமுக தலைவர்களும் பிரசாரத்துக்கு வரவில்லை. ஆனால், அமமுக வேட்பாளர் பொன்னுத்தாய், ஏற்கனவே அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு தனது பிரசாரத்தை தொடங்கி விட்டார்.


Tags : area ,Thrissur ,
× RELATED வாட்டி வதைக்கும்...