×

சிங்கம்புணரியில் கோஷ்டி மோதலில் 6 பேர் கைது

சிங்கம் புணரி, ஏப். 8:சிங்கம்புணரியில் ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாக 6 பேரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.சிங்கம்புணரி வாத்தியார் ஐயா கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(24). இவரது தரப்புக்கும் கக்கன் ஜி நகர் பிரபு தரப்புக்கும் இடையே ஏப்.5 ல் மோதல் ஏற்பட்டது. இதில் சரத், அஜித்குமார் இருவருக்கும் காயம் ஏற்பட்டது.இது குறித்து பிரபு கொடுத்த புகாரில் சந்தோஷ்குமார (24), கிருபாகரன்(22), கலையரசன்(32) மற்றும் சந்தோஷ்குமார் கொடுத்த புகாரில் பிரபு(38), மதுக்குமார்(17), பாப்பாத்தி(40) என ஆறு பேர் மீது சிங்கம்புணரி போலீசார் வழக்குப்பதிவு கைது செய்தனர்.சிவகங்கை தொகுதியில்வாக்குச் சேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்சிவகங்கை, ஏப். 8: சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிடும் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பிரசாரம் முடிவடைந்தததையடுத்து வேட்பாளர்கள் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழகம் முழுவதும் ஏப்.18ல் மக்களவை தேர்தல் நடக்க உள்ளது. சிவகங்கை மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம், அதிமுக கூட்டணியில் பிஜேபி சார்பில் எச்.ராஜா, அமமுக சார்பில் தேர்போகி பாண்டி, மக்கள் நீதி மய்யம் சார்பில் கவிஞர் சினேகன் உள்பட பல்வேறு கட்சியினர், அமைப்புகள், சுயேட்சைகள் என 26 பேர் போட்டியிடுகின்றனர்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரே திமுக, அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைத்தல், தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் தேர்தல் அலுவலகம் திறப்பு என முக்கிய கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கியிருந்தது. காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொது செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முத்தரசன், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், உதயநிதி ஸ்டாலின், பீட்டர் அல்போன்ஸ் என பல்வேறு தலைவர்கள் பிரசாரம் செய்து முடித்துள்ளனர்.எச்.ராஜாவை ஆதரித்து பாஜ தலைவர் அமித்ஷா, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரேமலதா உள்ளிட்ட தலைவர்கள் பிரசாரம் செய்தனர். இத்தொகுதியில் பல்வேறு கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பிரசாரத்தை முடித்துவிட்ட நிலையில் தற்போது வேட்பாளர்களே தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர் இல்லாமல் கட்சியினரும் பகுதி, பகுதியாக வாக்கு கேட்டு வருகின்றனர்.கட்சியினர் கூறுகையில்,. ‘தலைவர்கள் வந்து சென்றுவிட்டனர். தேர்தலுக்கு இன்னும் குறுகிய நாட்களே உள்ளன. தலைவர்கள் பிரசாரம் முடிவடைந்துவிட்டதால் பணியில் தொய்வு ஏற்பட்டுவிடாமல் வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள்தான் வாக்கு சேகரிப்பு பணியில் முழுமையாக ஈடுபட்டு வருகிறோம். காலை, மாலை வேளைகளில் வீடு, வீடாக வாக்குச் சேகரிக்கும் பணியும், ஒரு குறிப்பிட்ட இடத்தில் வேட்பாளர் பிரசாரம் செய்யும் பணியும் நடந்து வருகிறது’ என்றனர்.

Tags : quake clash ,
× RELATED கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்