×

தர்மபுரி உழவர் சந்தையில் அன்புமணிக்கு ஆதரவாக சவுமியா வாக்கு சேகரிப்பு

தர்மபுரி, ஏப்.8: தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில், அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் டாக்டர் அன்புமணி போட்டியிடுகிறார். தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் அன்புமணியை ஆதரித்து, அவரது மனைவியும், பசுமை தாயகத்தின் தலைவருமான சவுமியா அன்புமணி ஆதரவு திரட்டி வருகிறார். நேற்று காலை தர்மபுரி உழவர் சந்தையில், விவசாயிகள் மற்றும் நுகர்வோர்களிடம்,  கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது, சவுமியா அன்புமணி பேசியதாவது: கடந்த முறை தேர்தலில் அன்புமணி போட்டியிட்ட போது, மொரப்பூர்-தர்மபுரி ரயில்வே இணைப்பு பாதை திட்டம் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.

அதன்படி, தற்போது ரயில்வே இணைப்பு பாதை திட்ட பணிகள் நடந்து வருகிறது. தர்மபுரி மாவட்ட வளர்ச்சிக்காக, 13 திட்டங்கள் தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில் 4 திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகள் முழுமையாக நிறைவேற வேண்டும் என்றால், மீண்டும் அன்புமணி ராமதாஸ் எம்பியாக வரவேண்டும். மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து அன்புமணியை எம்பியாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது, பாமக துணை பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரன், மாநில துணை தலைவர்கள் சாந்தமூர்த்தி, பாடி செல்வம், மாவட்ட செயலாளர் சண்முகம், பசுமை தாயகம் மாது, மாநில இளம்பெண்கள் சங்க தலைவர் சாந்தினி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அவருடன் வாக்கு சேகரித்தனர்.

Tags : Chaumia ,farmers market ,Dharmapuri ,DMN ,
× RELATED தர்மபுரி எம்எல்ஏ ஆபீஸ் பூட்டு உடைத்து திறப்பு