×

கோட்டூர் அரசு பள்ளிக்கு ₹4.10 லட்சத்தில் கல்விச்சீர்

போச்சம்பள்ளி, ஏப்.8: மத்தூர் அருகே கோட்டூர் அரசு பள்ளிக்கு ₹4.10 லட்சம் மதிப்பிலான பொருட்களை கிராம மக்கள் கல்விச்சீராக வழங்கினர்.
மத்தூர் ஒன்றியம் கோட்டூர் அரசு நடுநிலைப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் விழா, புதிய வகுப்பறை திறப்பு, நிரந்தர மேடை, பள்ளி ஆண்டு விழா மற்றும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா என ஐம்பெரும் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு வட்ட கல்வி அலுவலர் சபீக்ஜான் தலைமை தாங்கினார். வட்டரா கல்வி அலுவலர் முனிரெட்டி, மேற்பார்வையாளர் அசோக்ராஜா முன்னிலை வகித்தனர். விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் நடராஜன் கலந்து கொண்டு பேசினார்.

கிராம மக்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில், ₹4 லட்சத்து 10 ஆயிரத்திற்கு கல்விச்சீர் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து எல்கேஜி, யுகேஜி, முதல் வகுப்புகளில் புதியதாக 45 மாணவர்கள் சேர்ந்தனர். அவர்களுக்கு மாலை அணிவித்து பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கமிட்டி தலைவர் விழவில் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் ராமன், பொருளாளர் சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியர் மௌனசுந்தரி வரவேற்றார். ஆசிரியர் அருள் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சர்ஜான், சத்யகுமார், லட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Kodur ,government school ,
× RELATED பொருட்களை திருட முயன்ற மர்ம நபர் கீழே விழுந்து சாவு