×

ஊத்தங்கரை பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தீவிர பிரசாரம்

ஊத்தங்கரை, ஏப்.8: ஊத்தங்கரை பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் செல்லக்குமார் சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்தார். அவருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். மதச்சார்பற்ற கூட்டணியின் சார்பில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் டாக்டர் செல்லக்குமார் போட்டியிடுகிறார். இவர், கிராமம் கிராமமாக சென்று தீவிர பிசாரத்தில் ஈடுபட்டுள்ளார். ஊத்தங்கரை பகுதியில் திருவனப்பட்டி, வீரனகுப்பம். மேட்டுத்தாங்கல், கல்லாவி வீராச்சிகுப்பம், சாமல்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று ஆதரவு திரட்டினார். அவருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். ஊத்தங்கரை அருகே திருவனப்பட்டியில் திறந்த வேனில் சென்று பொதுமக்களிடையே பேசியதாவது: தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரங்களுக்காக மோடியை சந்திக்க தில்லியில் பலவிதமான போராட்டங்களை நடத்தினர். இறுதியில் நிர்வாண போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஆனால், அவர்களின் போராட்டங்களுக்கு மோடி செவிசாய்க்கவில்லை. ஆனால், அவர்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் உங்களுடைய குறைகள் களையப்படும் என உறுதியளித்தார். பாஜக ஆட்சிக்கு வந்ததும், ஆளுக்கு தலா ₹15 லட்சம் தருவதாக மோடி கூறினார். ஆனால், 15 பைசா கூட கொடுக்கவில்லை. இவ்வாறு காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர். செல்லக்குமார் பேசினார்.
அவருடன் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ, மாவட்ட துணைச்செயலாளர் சந்திரன், மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் மாலதி, இளைஞரணி ரஜினி செல்வம், ஊத்தங்கரை ஒன்றிய திமுக செயலாளர்கள் சுவாமிநாதன், எக்கூர் செல்வம் உள்ளிட்ட தோழமை கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர்.

போச்சம்பள்ளி: கிருஷ்ணணகிரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர். செல்லக்குமார் மத்தூர் ஒன்றியத்தில் திமுக மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ தலைமையில் வாக்கு சேகரித்தார். ஆனந்தூர், சாமல்பட்டி, குன்னத்தூர், காட்டுப்பட்டி, ஒலைப்பட்டி கூட்ரோடு, கண்ணன்டஅள்ளி, சிவம்பட்டி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று ஆதரவு திரட்டினார். அவருடன் முன்னாள் எம்பி சுகவனம், ஒன்றிய செயலாளர் பொன்.குணசேகரன், முன்னாள் எம்எல்ஏ நரசிம்மன், மாவட்ட அமைப்பாளர் செந்தில், அன்பு, ரமணன், தனசேகரன், சங்கர், முன்னாள் தலைவர்கள் உதயகுமார், சரவணன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட பொதுச்செயலாளர் மனோகரன், மாவட்ட துணைத்தலைவர் லோகநாதன், வட்டரா தலைவர் லோகநாதன், அஜ்முதீன், ஜாமல், பாபு உள்ளிட்டோர் வாக்கு சேகரித்தனர்.

Tags : candidate ,Congress ,campaign ,Uthangarai ,
× RELATED வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட...